அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி
ஆறுதலை துரத்திச்செல்லுதல்
நாம் அனைவருமே மன அழுத்ததுடனோ, வேதனையுடனோ, சோர்வாகவோ, தனிமையாகவோ, சலிப்பாகவோ, இவ்வாறு எந்த மன நிலையில் இருந்தாலும் ஆறுதலை நாடுகிறோம். நம்மில் யார் தான் அதிகமாக சாப்பிட்டும், தூங்கியும், செலவழித்தும் இம்மாதிரியான பொருட்களுக்கு அதிக மதிப்பும் அளித்து நீடிய ஆறுதலினை தேடாமல் இருந்திருப்போம்?
ஆறுதல்(comfort) என்னும் ஆங்கில வார்த்தைக்கு என்றே ஒரு நுணுக்கமான வரலாறு உண்டு. இது லத்தின் மொழியில் உள்ள இரண்டு வாரத்தைகளில் இருந்து உருவான வார்த்தை. அதாவது ஒன்றாக அல்லது உடன் என்று அர்த்தம் கொள்ளக்கூடிய com-, மற்றும் பலம் அல்லது பெலன் என அர்த்தம் கொள்ளக்கூடிய fortis ஆகிய இவ்விரு வார்த்தைகள். பிற்காலத்தில் comfortare என்னும் லத்தீன் வார்த்தை "மிகவும் பலப்படுத்த" என்று திரிந்து அர்த்தம் கொள்ளப்பட்டது. இறுதியில், ஒரு பழைய பிரெஞ்சு சொல், conforter, வரையறைக்கு “ஆறுதல்” மற்றும் “உதவி” போன்ற சொற்களைச் சேர்த்தது. 14 ஆம் நூற்றாண்டில், மற்றொரு பிரெஞ்சு சொல் conforten பொருள் "உற்சாகப்படுத்த, ஆறுதல்" என்று வரையறுக்கப்பட்டது. இறுதியாக, 17 ஆம் நூற்றாண்டில், இந்த வார்த்தையின் ஆங்கில பதிப்பு இன்று நாம் புரிந்துகொள்ளும் உடல் எளிமையின் (வசதி) உணர்வைக் குறிக்கத் தொடங்கியது.இவ்வார்த்தையின் வரலாறு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? இது ஒரு ஆயிரம் ஆண்டு காலத்தில் அதன் பொருள் "ஒன்றாக - பலம்" என்பதிலிருந்து ஆறுதல் அல்லது வசதி என்று பொருள் திரிந்து உள்ளது.
நீங்கள் தேவனை உங்கள் வேதனையின் மத்தியில் பலமாக பார்கிறீர்களா அல்லது உங்கள் வலிகளுக்கு தடையாக பார்க்கிறீர்களா?
ஏசாயா தீர்க்கதரிசி மேசியாவின் வருகையை இவ்வாறாக முன்னறிவித்தார், அவர் இவ்வுலகில் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கரமங்களினிமித்தம் நொருக்கப்படுவார் என்பதே. நம்முடைய விசுவாசத்தின் இயல்பு இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாக இருக்குமானால், வேதனைக்கும் அவர் அளித்த பதிலைக் கருத்தில் கொள்வோம். 1 பேதுரு 2: 21-25-ல், நமது இரட்சகரைப் பார்க்கிறோம், வலியினை பெறும் அளவிற்கு எதுவும் செய்யாதிருந்தும் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டார். அவர் வலியைத் தவிர்க்கவில்லை மற்றும் ஒரு பலிகடாவையும் தேடவில்லை; அவர் நம்முடைய மீறுதல்களுக்கான வலிகளை அவருடையதாக்கினார்.
இயேசு நமக்கு வேதனையில் நம்முடனான பலம். பின்னர், அவர் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன், பரிசுத்த ஆவியானவரை நமக்கு "தேற்றரவாளனாக" இங்கு வாக்களிக்கிறார்- பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருப்பதற்காக மட்டுமல்ல, நம்முள் இருப்பதற்கு வாக்களிக்கப்பட்டுள்ளார். பரிசுத்த ஆவியானவர் நாம் தேடிச்செல்ல ஏற்றவர்.
எனவே உலகப்பிரகாரமான ஆறுதலினை நண்பர்களுடன் சேர்ந்து சிற்றினங்களில் தேடுவதையெல்லாம் விட்டு விட்டு, பரிசுத்த ஆவியானவருடைய ஆறுதலினை நமது வேதனைகளின் மத்தியில் அனுபவிக்க முற்படுவோம். அவ்வாழ்க்கை வலிகள் அற்றதாய் இல்லாவிடினும், தேற்றரவாளன் வலிகளின் தடுப்பாய் அல்ல வலியின் மத்தியில் ஆறுதலாய் இருப்பார்.
ஜெபம்: தேவனே, எனக்கு வசதியற்ற வாழ்க்கை பிடிக்காவிடினும் நான் உம்மை நேசிக்கிறேன். உம்முடைய ஆறுதலினைப் புரிந்துக்கொள்ளவும் அதை உணர்ந்து கொள்ளவும் உதவும். பரிசுத்த ஆவியானவரே உம்முடன் இருபதற்குண்டான பலத்தை என்னுடனும் என்னிலும் வெளிப்படுத்தும். இயேசுவே என்னுடைய பாவங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தமைக்காக நன்றி. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.
More