அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி

Chasing Carrots

7 ல் 2 நாள்

கீர்த்தியை அடைய முயற்சித்தல்

fā'-mā என்று உச்சரிக்கப்படும் கீர்த்திக்கான கிரேக்க வார்த்தையான phēmē, என்பது புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அது பேச்சு, அறிக்கை அல்லது செய்தி என்பதாகவே வரையறுக்கப்படுகிறது. லூக்கா 4:14 இல் phēmē இவ்வாறுதான் பயன்படுத்தப்படுகிறது:

பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று

இயேசு எங்கிருந்து வந்ததினால் அவருடைய கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று? நாம் அந்த சூழலிற்குள் செல்வோம். லூக்கா 1 இல், நாம் இயேசுவின் பிறப்பினைக் குறித்து கேட்கிறோம். லூக்கா 2 இல், அவர் பிறந்து, ஒரு சிறுவனாக வளர்கிறார். லூக்கா 3 இல் ஞானஸ்நானம் பெறுகிறார். இறுதியாக, லூக்கா 4 முதல் பல வசனங்களில், இயேசு உபவாசமிருந்து பின்பு சாத்தானால் வனாந்திரத்தில் சோதிக்கப்படுகிறார். இதன் பிறகு நடப்பதைத்தான் லூக்கா 4:14 இல் நாம் வாசிக்கிறோம்.

பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே நிறைந்தவராய் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைக் குறித்த அறிக்கைகள் சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று

லூக்கா 4:14 NLT ஆங்கில மொழிபெயர்ப்பு

இன்றைய வாசிப்பில், வனாந்தரத்தில் இயேசுவின் சோதனை குறித்த முழு கதையையும் நீங்கள் தியானிக்கப் போகிறீர்கள். இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசித்துக் கொண்டிருந்தபோது, சாத்தான் இயேசுவை தவறான உணவு (லூக்கா 4:3-4), தவறான புகழ் (லூக்கா 4:5-8), மற்றும் தவறான விசுவாசம் (லூக்கா 4:9-12) போன்றவைகளினால் சோதித்தான். ஒவ்வொரு முறையும், இயேசு சோதனையை முறியடித்து, தேவ வார்த்தையினால் பதில் கொடுத்தார்.

லூக்கா 4:14 இல் சொல்லப்படும் கீர்த்தியானது நாம் எப்பொழுதும் அடைய முயற்சிக்கும் கீர்த்தியல்ல, அப்படித்தானே? நாம் சாத்தான் வனாந்தரத்தில் இயேசுவுக்கு கொடுப்பதாகச் சொன்ன கீர்த்தியை நாடுகிறவர்களாய் இருக்கிறோம். திருப்தியில்லாத உணவு (லூக்கா 4:3-4), தியாகமில்லாத மேன்மை (லூக்கா 4:5-8), மற்றும் ஒப்புக்கொடுத்தலில்லாத இரட்சிப்பு (லூக்கா 4:9-12).

வேலையில் கிடைக்கும் அங்கீகாரம், சமூக ஊடகங்களில் பெறும் விருப்பங்கள், மற்றும் மற்றவரிடமிருந்து பெறும் புகழ்ச்சி போன்றவற்றை நினைத்துப்பாருங்கள். அந்தத் தருணத்தில் அது மகிழ்ச்சியாக இருக்கும், பிறகு உடனடியாக இன்னும் அதிகமாக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும். உண்மையைச் சொல்வதானால், நாம் அனைவருமே ஏதோ ஒரு விஷயத்திற்காக கவனிக்கப்படவோ அல்லது பிரசித்தமாயிருக்கவோ விரும்பிய தருணங்களை கடந்து வந்திருக்கக்கூடும். அதுபோலவே, சாத்தான் இயேசுவிற்கு பணம், செல்வாக்கு, மற்றும் அதிகாரத்தை வழங்குகிறான். இயேசுவும் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் அந்தக் கண்ணியில் சிக்கவில்லை.

மேலும் சாத்தான் இயேசுவுக்குக் கொடுத்த இறுதி சோதனையைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். தேவன் தம்முடைய கைகளில் ஏந்திக்கொள்ளும்படியாக இயேசுவைக் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதிக்க சொல்லுகிறான். நீங்கள் எப்போதாவது நீங்கள் விரும்பியவாறு, நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் காரியங்கள் நடக்க வேண்டுமென்று தேவனைக் கட்டாயப்படுத்துகிற ஜெபத்தை ஏறெடுக்க முயன்றுள்ளீர்களா? அது கட்டாயம் தேவனைக் கனப்படுத்துவதாக இருக்காது. ஆகவேதான் இயேசு தேவனை அவ்வாறு சோதிக்கக்கூடாது என்று பதிலளிக்கிறார்.

கிரேக்க மொழியின் எழுத்து வடிவில்லாத மூதாதையரான PIE(புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழி) என்னும் புனரமைக்கப்பட்ட மொழி ஒன்று உள்ளது. “பிரகாசிக்க” மற்றும் “பேச” என அர்த்தம் கொண்ட அம்மொழியின் வேர்-சொல் ஆன - பஹா (bha) phēmē, என்றானது. எனவே நாம் மீண்டும் நம்முடைய மூல உபதேசத்திற்குச் செல்வோம்.. நாம் ஒளியாக இருக்கும்படி உண்டாக்கப்படவில்லை, உலகின் ஒளி இயேசு கிறிஸ்துவே. ஆனால் அவரது ஒளியினைபிரகாசித்து வெளிப்படுத்த நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் வார்த்தையல்ல. அதுவும் இயேசுவே என்று யோவான் எழுதின சுவிசேஷம் சொல்கிறது. ஆகவே நாம் அவருடைய வார்த்தையை உலகெங்கும் பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கீர்த்தியை அடைய முயற்சித்தல் என்பது தேவனுக்கு பின்செல்வதற்கு பதிலாக தேவனுக்குரியதற்கு பின்செல்லும் செயலாகும். இதுவே மிகப்பழமையான சோதனையாகும். அதற்குக் கீழ்ப்படாதிருங்கள். அடுத்த முறை நீங்கள் புகழ் என்னும் சோதனையை எதிர்கொள்ளும்போது இயேசு செய்ததைப் போலவே செய்யுங்கள். தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பதன் மூலம் தேவனுடைய ஒளியினை பிரகாசியுங்கள். இவ்வாறு செய்யும் போது லூக்கா 4:14 இல் சொல்லப்பட்டவாறு நடக்கும். அவருடைய கீர்த்தி உலகெங்கும் பரவும்.

ஜெபம்: தேவனே, மற்றவர்களுக்குப் பிடித்த வகையில் வாழ முயற்சிப்பது உம்முடைய ஒளியினை பிரகாசிப்பதிலிருந்து எவ்வகையில் என்னைத் தடைசெய்கிறது? உணர்த்தும். என்னில் உள்ள அனைத்தையும் கொண்டு நான் உம் பின் செல்ல விரும்புகிறேன். ஆமென்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Chasing Carrots

நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.