அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்மாதிரி

Chasing Carrots

7 ல் 5 நாள்

சாதனையை தேடுவது

வேதாகம ராஜாக்களை பார்க்கும்போது, சாலொமோனைப்போல யாரும் சாதித்ததில்லை. இஸ்ரவேல் தேசம் அவருடைய ஆட்சியில் செழித்தது. தேவனுடைய ஆலயத்தின் கட்டுமானத்தை அவர் நடத்தினார். அவருக்கென்று ஒரு ராஜ அரண்மனையை காட்டினார். அதிக தூரத்திலிருந்து ஆட்சியாளர்கள் அவருடைய ஐஸ்வரியத்தை பார்க்க வரும் போது அவர்களுடன் பொன் மற்றும் பல ஈவுகளை கொண்டுவருவார்கள். அவரிடம் கேட்கப்படும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் சொல்லமுடிந்தது. அவர் விரும்பிய பெண்களை தம் மனைவிகளாக கொண்டிருந்தார். வாழ்க்கையில் தனக்கு வேண்டும் என்று விரும்பிய அனைத்தினாலும் அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.

இந்த உலகில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கவேண்டிய நபர் ஒருவர் உண்டென்றால் அது சாலோமோனாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் பிரசங்கி புத்தகத்தில், சாலொமோன் வேறொரு காட்சியை வர்ணிக்கிறார். அவர் சொல்கிறார், "சூரியனுக்கு கீழாய் நான் வேலை செய்ததெல்லாவற்றதையும் நான் வெறுத்தேன்..." பின்னர் சொல்கிறார், "ஏனென்றால் நான் அதை எனக்கு பின்னால் வருபவருக்கு விட்டுச்செல்லவேண்டும்.”

சாலொமோன் ஒன்றை கண்டுபிடித்திருந்தார். நாம் நித்தியத்திற்கு ஒன்றையும் எடுத்துசெல்லமுடியாது. நம்முடைய பதவி உயர்வுகள், வீடுகள், சாதனைகள், கார்கள், விடுமுறைகள் அனைத்தும் இங்கேயே தங்கிவிடுகின்றன.

எதுதான் வாழ்க்கையில் எண்ணப்படும் என்று நினைக்கிறீர்களா?

சாலொமோன் அந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தார். பிரசங்கியின் முடிவில் அதை விளக்குகிறார், "தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளை கைக்கொள், எல்லா மனிதகுலத்திற்கு இதுவே கடமை.”

முதல்பார்வையில் அது மிக முக்கியமான ஒன்றாக தோன்றாது, ஆனால் திரும்ப அதை பாருங்கள். சாலொமோன் சொல்கிறார் இந்த காரியங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்று நாம் தேடவேண்டும்: தேவனுக்கு பயப்படல்-அதற்கு அர்த்தம் அவரை நேசிப்பது, கனப்படுத்துவது, அவர் சொல்வதை செய்வது.

உலகம் "ஓடு! நிற்காதே" என்று சொல்வதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். அந்த விலை உயர்ந்த பொருட்களை பார்? அந்த சாதனைகளை பார்த்தாயா? ஆயிரக்கணக்கான மற்ற மக்கள் அதை விரும்புகிறார்கள், ஆனால் நீ விட்டுக்கொடுத்துவிடாதே. அவைகளுக்காக நீ போட்டிபோட்டு! உன்னுடைய வாழ்க்கையில் நீ வேறு எண்ணத்தை செய்யப்போகிறாய்? வாழ்க்கை ஒரு போட்டி, சிறந்தவர்களே ஜெயிப்பார்கள்.”

ஆனால் தேவனுடைய வார்த்தை சொல்கிறது, "தேவனை நேசி, நல்லதையே செய்.”

இது எப்படி எல்லோருக்கும் கூடியதாக இருக்கிறது என்று கவனியுங்கள். நீங்கள் தனியாகவோ, திருமணமாகியோ. ஐசுவரியமாகவோ, ஏழையாகவோ. வாலிபனாகவோ, வயோதிபராகவோ. ஆரோக்கியத்தோடோ, சுகவீனமாகவோ. தேவனை நேசித்து, நல்லதை செய்.

கவனி: உன்னுடைய குறிக்கோள் தேவனை நேசித்து நல்லதை செய்யவேண்டும் என்று இருந்தால், இந்த நாளில் என்னவெல்லாம் மாறும்? இந்த குறிக்கோளை நீங்கள் எப்படி எட்ட முடியும்?

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Chasing Carrots

நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.life.church/ஐ பார்வையிடுங்கள்.