வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
தயக்கமற்ற விசுவாசம்
தேவனுடைய வார்த்தையை அவரிடம் இருந்து நீங்கள் கேட்ட ஒரு காலத்தை நினைத்துப் பாருங்கள், அது ஒரு வாக்குறுதியாகவோ, உறுதிப்படுத்தலாகவோ அல்லது நம்பிக்கையாகவோ இருந்ததா. அதற்க்கான உங்களது உடனடி பதில் என்ன? அவர் சொன்னதை நீங்கள் செயல்படுத்தினீர்களா, அல்லது அது உண்மையில் அவருடைய குரலா என்று நீங்கள் உட்கார்ந்து யோசித்தீர்களா? அல்லது அவருடைய வார்த்தை தான் என்று அறிந்தும் இன்னும் தயங்கி நிற்கிறீர்களா. (மறுப்பு: பரவாயில்லை - நாம் அனைவரும் இதைச் செய்துள்ளோம்!)
இயேசுவின் பிறப்பைப் பற்றியதான நற்செய்தியை தேவதூதர்கள் மேய்ப்பர்களிடம் சொன்னபோது, அவரைப் பார்ப்பதற்காக அவர்கள் “விரைந்து சென்றார்கள்” என்று லூக்கா 2 கூறுகிறது. காத்திருந்து சந்தேகத்தை ஊடுருவ விடாமல், அவர்கள் உடனடியாக சென்றனர். இதற்கு மிகுந்த விசுவாசம் வேண்டும்! நிச்சயமாக, அவர்கள் இயேசுவைச் சந்திக்க விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கும் பூமிக்குரிய கவலைகள் இருந்தன. அவர்கள் தங்கள் மந்தையை என்ன செய்வார்கள்? அவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டுமா? அவர்கள் சரியான ஆடை அணிந்திருந்தார்களா? எளிய மேய்ப்பர்கள் ராஜாதி ராஜாவை சந்திக்க உண்மையில் தகுதியானவர்களா? இப்படியெல்லாம் அதே சூழ்நிலையில் நாம் இருந்தால் கேட்டிருக்கக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் தங்கள் நினைவுக்கு எட்டவொட்டாமல் தேவனுடைய வார்த்தைக்கு விரைந்து பதிலளித்தனர்.
நாமும் இயேசுவைப் பின்பற்றும்போது, இந்த வகையான விசுவாசத்தைக் கொள்ள வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தைக்கு தயங்கும்போது, சந்தேகம், பயம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால் அவதிப்படுவோம். அவை எதுவுமே அவரிடமிருந்து வரவில்லை. அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையை நீங்கள் கேட்கும்போது, அவர் காட்டும் திசையை நம்புங்கள். அவர் உங்களிடம் கேட்டதைச் செய்ய அவர் உங்களைச் சித்தப்படுத்துவார். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பதிலளிபப்தே. இன்று உங்களது விசுவாசத்தை ஸ்திரப்படுத்துங்கள், உங்களிடம் தேவன் போ என்று கூறும்போது போக வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள், அது எதற்காக மற்றும் எதுவாக இருந்தாலும்!
ஜெபம்: அப்பா பிதாவே, என்னுடன் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு நன்றி. நீங்கள் என்னிடம் பேசியபோது நான் தயங்கிய நேரங்களுக்கு என்னை மன்னியுங்கள். எனது வாழ்க்கைக்கான உங்கள் திட்டத்தை நான் பின்பற்ற விரும்புகிறேன். என் விசுவாசத்தை பலப்படுத்துங்கள், நான் உங்களிடமிருந்து கேட்கும்போது விரைவாக பதிலளிக்க எனக்கு உதவுங்கள்.
இன்றைய வேத வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்யஇங்கே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More