வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 21 நாள்

மதிப்புள்ள காத்திருத்தல்

லூக்கா 2: 25-32 ஆம் வசனங்கள், சிமியோன் என்ற மனிதனின் கதையைச் சொல்கிறது, அவர் இறப்பதற்கு முன்பு மேசியாவைக் காண்பார் என்று தேவனிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றிருந்தார். இந்த வாக்குறுதியை தேவன் நிறைவேற்றுவதற்காகவே சிமியோன் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார், பொறுமை மற்றும் விடாமுயற்சி பற்றி அவரது வாழ்க்கை நமக்கு ஏதாவது கற்பிக்க முடியும். சிமியோன் “நீதியும் பக்தியும் உடையவர்” என்று வேதம் கூறுகிறது. . . பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இருந்தார். " அந்தளவுக்கு, அவர் ஆலய நியாயஸ்தலங்களைப் பார்வையிட ஆவியால் தூண்டப்பட்டார், அது தேவாலயத்தில் இருந்தது, அங்கு தேவனின் வாக்குறுதி நிறைவேறியது. அவர் மரியாளையும் யோசேப்பையும் சந்தித்து குழந்தை இயேசுவைக் கையில் தூக்கினார். அந்த நேரத்தில்‌ தானே, தேவனின் வாக்குறுதிக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருந்தது மதிப்புக்குரியதாக மாறியது.

தேவனின் உண்மையான இயல்பான பிரதிநிதித்துவத்தை உங்கள் கைகளில் வைத்திருப்பதன் பெரும் அனுபவத்தை கற்பனை செய்து பாருங்கள். சிமியோன் இயேசுவை தன் கைகளில் எடுத்து “தேவனைப் புகழ்ந்தார்” என்று லூக்கா பதிவிடுகிறார். சிமியோன் அழுதாரா அல்லது நடனமாடினாரா என்பது நமக்கு தெரியாது, ஆனால் நம்மையே அவரது காலணிகளில் வைத்தால், நமது பதில் அவருடையது போலவே இருக்கும். தேவனைப் புகழ்வதைப் போல வேறு எந்த எதிர்வினையும் அந்த நேரத்திற்கு பொருத்தமானதாக இருக்காது!

தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியை பெற்றிருந்து அது உடனே நிறைவேற்றாவிட்டால் மனதை இழக்காதீர்கள். அவர் உண்மையுள்ளவர், அவருடைய நேரம் சரியானது. உங்கள் வாக்குறுதி சில வாரங்களிலோ அல்லது வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையின் பின்னரோ எப்போது நிறைவேற்றப்பட்டாலும், அதன் விளைவு மதிப்புள்ளதுதான்.

ஜெபம்: அப்பா பிதாவே, நீர் உண்மையுள்ளவராக இருப்பதால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்! நீர் நம்பகமானவர் என்று எனக்கு தெரியும், எனக்கான உமது வாக்குறுதிகள் உண்மையுள்ளவைத்தான். நான் உமது வாக்குறுதிகளை விசுவாசிக்கிறேன், நீர் அவைகளை நிறைவேற்றும் நாளிற்காக எதிர்பார்த்திருக்கிறேன். உமது நேரம் சரியானது என்று எனக்குத் தெரியும். நான் காத்திருக்கிறேன் மற்றும் நான் உண்மையாகவே இருப்பேன், உமது வாக்குறுதிகளை நீர் நிறைவேற்ற போவதற்காக உம்மை துதிக்கிறேன்!

இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நாள் 20நாள் 22

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்