வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 23 நாள்

ராஜா, தேவன், மற்றும் மீட்பர்

மத்தேயு 2: 11 ல், சாஸ்திரிகள் இயேசுவுக்கு மூன்று புகழ்பெற்ற பரிசுகளை கொண்டு வருகின்றனர்: பொன், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம். இந்த பரிசுகளுக்கு பழைய ஏற்பாட்டில் சிறப்பு முக்கியத்துவம் உண்டு, அவை அவர்கள் வணங்க வந்ததை பிரதிபலிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சங்கீதம் 72: 15-ல் தங்கம் ராஜ மரியாதையைக் குறிக்கிறது, பொன் பரிசானது இயேசுவை ராஜாதி ராஜா என்று உறுதிப்படுத்தியது. யாத்திராகமம் 30: 34-ல் தேவனை ஆராதிப்பதோடு தூபவர்க்கம் தொடர்புடையது என்பதை விளக்குகிறது, இங்கே அந்த பரிசு இயேசுவே தேவன் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும் வெள்ளைப்போளம் யாத்திராகமம் 30: 22-25-ல், சிறப்பு நோக்கங்களுக்காக மக்களை அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இயேசு முதன்முதலில் பிறப்பின் பரிசாக அதைப்‌பெற்றார். இயேசு கடைசியாக வெள்ளைப்போளத்தினை சிலுவையில் மற்றும் அவரது அடக்கத்தின் போதிலுமே பெற்றார். இந்த பரிசு இயேசுவின் வாழ்க்கையின் உன்னதமான நோக்கத்தை சுட்டிக்காட்டுகிறது: நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அவர் சிலுவையில் மரித்து,மரணத்தை வென்று உயிர்த்தெழுப்பப்படுவார் என்பதே அந்த உன்னத நோக்கம்.

மத்தேயு 2 ஆம் அதிகாரத்திலுள்ள வசனமானது இயேசுவைக் கண்டபோது சாஸ்திரிகளின் செயலை நமக்கு நினைவூட்டுகிறது, "சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டனர்". நாமும் இயேசுவுக்கு "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்பதை அறிந்தே இயேசுவை நம்முடைய ராஜாவாக வணங்குகிறோம் (மத்தேயு 28:18). மேலும் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்னும் சத்தியத்தை அறிந்ததினாலேயே இயேசுவை நம்முடைய சொந்த தெய்வமாக வணங்குகிறோம் (யோவான் 1:3). மேலும் "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." என்பதையும் அறிக்கையிடுகிறதினாலே இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராக வணங்குகிறோம் (யோவான் 3:16). அன்று சாஸ்திரிகளை நட்சத்திரம் இயேசுவிடம் எப்படி நெருங்கி வரச் செய்ததோ அதேபோல் இன்று இந்த கிறிஸ்து பிறந்த காலத்தில் இயேசுவிடம் உங்களை நெருங்கி வர உதவும்படி ஆராதனையில் தேவனிடம் கேளுங்கள்.

ஜெபம்: அப்பா பிதாவே, என்னை உங்கள் அருகில் வைத்துள்ளமைக்கு நன்றி. அன்று சாஸ்திரிகளை நட்சத்திரம் இயேசுவிடம் எப்படி நெருங்கி வரச் செய்ததோ அதேபோல் இன்று இந்த கிறிஸ்து பிறந்த காலத்தில் இயேசுவிடம் நெருங்கி வர உதவுங்கள். இயேசுவே, நான் உம்மை என் ராஜாவாகவும், என் தேவனாகவும், என் இரட்சகராகவும் வணங்குகிறேன்! பரிசுத்த ஆவியானவரே, உம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ள மற்றவர்களை இயேசுவிடம் நெருங்கி வரச் செய்ய எனக்கு வழிகாட்ட உதவுங்கள்.

இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்யஇங்கே.

ஆதாரங்கள்: ஜான் மாக்ஆர்தர், மத்தேயு 1–7, வில்லியம் ஹெண்ட்ரிக்சன், மத்தேயு படி நற்செய்தியின் வெளிப்பாடு, டேவிட் பிளாட், மத்தேயுவில் இயேசுவை உயர்த்துவது, கிராண்ட் ஆர். ஆஸ்போர்ன், மத்தேயு , (புதிய ஏற்பாட்டில் சோண்டெர்வன் எக்செக்டிகல் வர்ணனைத் தொடர்).
நாள் 22நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்