வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
தொடர் முயற்சி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது
லூக்கா 2:22 இல், இயேசு குழந்தையாக இருந்தபோது, மரியாளும் யோசேப்பும் அவரை எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு அழைத்து வந்தார்கள், அவரை தேவனிடம் சமர்ப்பிக்கவும் கர்த்தருடைய சட்டங்களுக்கு மரியாதை செலுத்தவும் அழைத்து வந்தனர். இயேசு வளர்ந்தார், வலிமை பெற்றார், ஞானத்தால் நிரப்பப்பட்டார், தேவனின் கிருபை அவர்மீது இருந்தது (40 வது வசனத்திலிருந்து). நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இயேசு ஒரு முன்மாதிரி, ஆனால் அவரை கடவுள் என்ற நோக்கில் மட்டுமே பார்த்தால் அது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். இயேசுவும் முழு மனிதராக இருந்தார், வேதத்தின் படி, அவர் வளரவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நம்முடைய இரட்சகரின் வளர்ச்சியைத் தூண்டியது எது?
நவீன கலாச்சாரத்தில், நம் உடல்களை எவ்வாறு வலிமையாக்கலாம், வியாபாரத்தில் அதிக வெற்றிபெறலாம், மனச்சோர்வை சமாளிக்கலாம் என்றெல்லாம் சொல்லும் சுய உதவி சந்தைப்படுத்தல் மூலம் நாம் பெறுகிறோம்... ஒரு சில ரூபாய்க்கு, நாம் மேலும் மேலும் கற்றுக் கொள்ளலாம் மற்றும் செயல்களையும் கற்றுக்கொண்டு மேலும் நம்மைப் மேம்படுத்திக்கொள்ளலாம்.
இயேசுவின் வளர்ச்சியைப் பற்றி வார்த்தை என்ன பேசுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நிச்சயமாக, வளர நம்முடைய சொந்த பலத்தில் நாம் எடுக்கக்கூடிய படிகள் உள்ளன, ஆனால் எந்தவொரு சுய உதவியும் இயேசுவின் வாழ்க்கையின் அழைப்பிற்கு அவரை தயார்படுத்தியிருக்க முடியாது. எந்தவொரு சுய உதவியும் நம் வாழ்வில் தேவனின் கிருபையின் இடத்தைப் பிடிக்காது. மிகவும் வெற்றிகரமான சுயமாக தயாரிக்கப்பட்ட தலைவர்கள் அல்லது விளையாட்டு வீரர்களைக் காட்டிலும் வயதான கிறிஸ்தவர்கள் அவர்களின் மரணக் படுக்கையிலும் அதிக ஞானத்துடனும் பலத்துடனும் காண்கிறோம். நாம் உதவ முயற்சிப்பதன் மூலம் ஞானத்தையும் பலத்தையும் பெற மாட்டோம். அவை தேவனைப் பின்தொடர்வதாலும் மற்றும் அவரை மகிமைப்படுத்துவதாலும் மற்றும் நமது வாழ்க்கையை மற்றும் தேவ கிருபையை அனுபவிப்பதிலும் கிடைக்க பெறும் துணை தயாரிப்புகளே இந்த ஞானமும் பலமும்.
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், நீங்கள் இயேசுவிடம் நெருங்கி வரும்போது என்ன சாத்தியம் என்பதில் கவனம் செலுத்துங்கள். அடைய முடியாத சில உலகத் தரத்தை அளவிட நீங்கள் போராட வேண்டியதில்லை. அவருடைய அருகாமையில் இருந்து உண்மையான ஞானமும் பலமும் வரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நாம் தினமும் அவரைப் பின்தொடரும்போது, நமது நோக்கத்திற்காக வளரவும், அதற்காக ஆயத்தப்படவும் அவர் செய்வார்.
ஜெபம்: அப்பா பிதாவே, என் ஞானத்திற்கும் வலிமைக்கும் ஆதாரமாக இருப்பதற்கு நன்றி. உமது கிருபை என் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறது. நான் எப்போதும் இருப்பதை விட நீங்கள் மிகப் பெரியவர் என்பது எனக்குத் தெரியும், உங்கள் பலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள நீர் விரும்பியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் போராடும்போது, என்னை விட உம்மிடம் சாய்ந்து கொள்ள எனக்கு உதவுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More