வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி

Advent: The Journey to Christmas

25 ல் 22 நாள்

உலகத்திற்கான தேவனுடைய இருதயம்

சாஸ்திரிகள் ஜோதிடர் ஆவர், இந்த உண்மை இயேசு இருக்கும் இடத்துக்கு அவர்களை வழிநடத்த தேவன் ஏன் ஒரு நட்சத்திரத்தைப் பயன்படுத்தினார் என்பதை விளக்குகிறது. அவர்களுடைய கவனத்தை அவர் எவ்வாறு பெற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஜோதிடர்களாக, கிறிஸ்து பிறந்த நாளில் இன்றைய காலக் கட்டத்தில் நாம் சேர்க்கும் ஞானிகள் மந்திரவாதிகளாக இருந்தார்கள், அவர்கள் சகுனங்களையும் அறிகுறிகளையும் பார்த்து அதிகாரத்தைப் பெறுபவர்கள். கிழக்கிலிருந்து வந்த இந்த மனிதர்களின் இனம் மற்றும் பின்னணி குறித்து பல கோட்பாடுகள் உள்ளன, ஆனால் நமக்கு நிச்சயமாக ஒரு விஷயம் தெரியும்: அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் புறஜாதியார்.

பல நூற்றாண்டுகளாகவே, தேவன் தேர்ந்தெடுத்த மக்களான யூதர்களை விடுவிப்பதற்காக இரட்சகர் வருவார் என்று மக்கள் கருதினர். இது ஒரு நியாயமான அனுமானம், ஏனென்றால் பொய்யான கடவுள்களை வணங்கிய புறஜாதி தேசங்களால் அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர். ஒரு உண்மையான தேவன் தம்முடைய நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்க பூமிக்கு வந்திருந்தால், நிச்சயமாக அது யூதர்களின் நலனுக்காகவே இருக்கும்.

ஆனால், ஸாஸ்திரிகளுக்கு இயேசுவின் பிறப்பின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தும்போது, ​​நம்முடைய பின்னணி அல்லது சீரழிவின் ஆழம் எதுவாக இருந்தாலும், முழு உலகத்துடனும் சமரசம் செய்ய வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தின் முதல் தெளிவான பார்வையைப் பெறுகிறோம். இது ஒரு முக்கியமான தருணம், குறிப்பாக யூத வம்சாவளியைச் சேராதவர்களுக்கு. இயேசு ஒரு தூய யூத பரம்பரையுடன் பிறந்து, ஆரம்பத்தில் இருந்தே அவர் தேர்ந்தெடுத்தவர்களை மீட்டுக்கொள்ள வந்திருந்தபோதும், ​​உலக மக்கள் அனைவரையும் நமது படைப்பாளருடனான உறவுக்குள் மீண்டும் கொண்டு வருவதையும் அவர் அவரது சிலுவை மரணத்தின் மூலம் நிலைநாட்டினார்.

அப்போஸ்தலர் நிருபத்தில் பவுல் இவ்வாறாக கூறுகின்றார் பரிசுத்த ஆவியானவர் யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் இடையில் வேறுபடுவதில்லை என்று. இயேசுவை விசுவாசிக்கிற எவரும் தேவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையாகிவிடுகின்றனர். பவுல் கொலோசெயர் 3-ல் மேலும் கூறுகிறார், "அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்". எல்லா தேசங்களும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதை இயேசு மாபெரும் ஆணையத்தில் தெளிவுபடுத்தினார். அவரது இதயம் உலகத்திற்கானது!

ஜெபம்: இயேசுவே, இவ்வளவு காலமாக உம்மை நிராகரித்த ஒரு உலகத்தை காப்பாற்ற வந்ததற்கு நன்றி. நான் முற்றிலும் அநீதியானவனாக இருந்து உம்மிடமிருந்து பிரிந்தபோது என்னுடன் ஒரு உறவை விரும்பியதற்கு நன்றி. நீர் உலகம் முழுவதையும் நேசிக்கிறீர் என்பது எனக்குத் தெரியும், உம்மிடமிருந்து தொலைவில் உள்ளவர்களைத் தொடர்ந்து அவர்களை உம்மிடம் சேர்க்க நான் உமது கைகளும் கால்களுமாக இருந்து உதவ விரும்புகிறேன். உமது அன்பை தேசங்களுக்கு எடுத்துச் செல்ல என்னைப் பயன்படுத்துங்கள்.

இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

ஆதாரங்கள்: https://www.christianitytoday.com/history/2016/december/magi-wise-men-or-kings-its-complicated.html
நாள் 21நாள் 23

இந்த திட்டத்தைப் பற்றி

Advent: The Journey to Christmas

உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Church of Highlands க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.churchofthehighlands.com க்கு செல்லவும்