வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
சேர்த்து வையுங்கள்
கிறிஸ்துமஸ் இரவு வேலையின் மத்தியில் ஒரு கணம் இருக்கிறது, வேதாகமம் இதை குறிப்பிடுகையில், "மரியாள் இந்த விஷயங்கள் அனைத்தையும் பொக்கிஷமாகவும், அவருடைய இதயத்தில் அவற்றை சிந்தித்தும் பார்த்துக்கொண்டிருந்தார்" மரியாளை இவ்வாறாக யோசித்துப்பாருங்கள் அதாவது ஒரு படி பின்எடுத்து ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து குழந்தையாக வந்துவிட்டார். யோசேப்பும் தனது பக்கத்திலிருந்தார். மேய்ப்பர்கள் மறுபுறம் ஒரு குழுவாக இயேசுவை தூதர்களுடன் கண்ட மகிழ்ச்சியான கதையை முழு நகரத்தினரிடமும் அறிவிக்கின்றனர். தனது இந்த குழந்தையை அனைவரும் கொண்டாடினர். இது தேவனுடைய விசுவாசத்தின் ஒரு அருமையான தருணமாக இருந்தது, மரியாள் அதைப் பார்த்து அனைத்தையும் தனது மனதிலே சேர்த்து வைத்துக்கொண்டாள்.
நாம் ஒரு காரணத்திற்காகவே அனைத்து விஷயங்களையும் சேமித்து வைக்கிறோம். நமக்குத் தேவைப்படும்போது சேமித்துத் தக்கவைத்துக்கொள்ளதைக் கொண்டு நாம் திரும்ப தேவையானவற்றை எடுத்துக்கொள்கிறோம். மேசியாவின் தியாகத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அறிந்த மரியாள், தனது விலைமதிப்பற்ற குழந்தை ஒரு நாள் நம்பமுடியாத துன்பங்களை அனுபவிப்பார் என்பதை அறிந்திருப்பார். தன் மகன் சிலுவையில் அறையப்பட்டபோது அவள் சிலுவையின் அடிவாரத்தில் நின்றபோது, தேவனின் உண்மையுள்ள தன்மையைப் பற்றிய ஒவ்வொரு நினைவையும் மரியாள் ஒத்திகை பார்த்திருக்க வேண்டும், அதனால் இயேசுவின் உயிர்த்தெழுதலின் வாக்குறுதியை அவர் தொடர்ந்து நம்பினார்கள். தாயாகிய அவர்களுடைய வேதனையின் மிகப் பெரிய தருணத்தில், தேவன் வாக்குறுதியளித்ததை தேவன் தக்க செய்வார் என்பதற்கான ஆதாரங்களின் தொகுப்பு அவளிடம் இருந்தது.
தேவனின் உண்மையை சோதித்துப் பார்க்கும் “மலை உச்சியில்” தருணங்களை நாம் அனுபவிக்கும்போது, நமது பழைய அனுபவத்தின் இறுதியில் நிறுவப்பட்ட தேவனின் உண்மையை நாம் மனதில் சேமித்து வைத்ததிலிருந்து அவரது உண்மையை சந்தேகிக்காமல் அவரை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும். யோவான் 16: 33 ல், “இந்த உலகில் [நமக்கு] பாடுகள் உண்டு” என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். ஆனால் அவர் உலகத்தை வென்றுவிட்டதால், நாமும் தளர்ந்துவிடாமல் இருக்கும் படி போதிக்கிறார். நம் வாழ்வின் கடினமான தருணங்களில், இயேசுவின் வெற்றியை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவருடைய நன்மையை நாம் கண்ட எல்லா வழிகளையும் நினைவுபடுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையில் தேவனின் உண்மையை நீங்கள் அனுபவிக்கும்போது, ஒரு படி பின்வாங்கி அதை உங்கள் இதயத்தில் புதையலாக சேமிக்கவும். அதை அடிக்கடி சிந்தியுங்கள். அப்போது மரியாளைப் போல உங்கள் கடினமான நாட்கள் வரும்போது, நீங்கள் சகித்துக்கொள்ள முடியும்.
ஜெபம்: அப்பா பிதாவே, நீர் உண்மையுள்ளவர் என்பதால் நான் உம்மைப் புகழ்கிறேன். நான் அதை என் கண்களால் பார்த்தேன், அதை மறக்க நான் விரும்பவில்லை. எனக்கான உமது வாக்குறுதிகளை நீர் நிறைவேற்றுவதை நான் காணும் தருணங்களை வேண்டுமென்றே சேமிக்க எனக்கு உதவுங்கள், இதனால் சிரமம் வரும்போது, என் நம்பிக்கை வலுவாக இருக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More