வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
ஆச்சரியமானவை ஆச்சரியமாயின
அந்த கிறிஸ்துமஸ் இரவில் “பரலோக சேனை” தோன்றியபோது மேய்ப்பர்களின் உணர்வுகளை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர்கள் வெறுமனே தங்கள் ஆடுகளை வயலில் மேய்த்து கொண்டிருந்தார்கள், திடிரென: வானம் முழுவதும் தேவதூதர்கள். அவர்கள் தேவதூதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஒரு தூதனை பார்ப்பது திகிலூட்டும் மற்றும் ஆச்சரியமாக இருக்கலாம். கற்பனை செய்து பாருங்கள், ஆயிரக்கணக்கான தூதர்கள் சேர்ந்து பாடுவது, நிச்சயம் அது மகிமை நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். என்ன ஒரு நம்பமுடியாத தருணம்!
தேவதூதர்கள் சில நேரங்களில் நமக்கு ஆராதனைக்கு தகுதியானவர்களாகத் தோன்றுகிறார்கள். பூமியில் நாம் காணும் எல்லாவற்றிலிருந்தும் அவர்கள் மிகவும் வேறுபட்டவர்கள், பரலோகத்தின் வெளிச்சத்தை பிரதிபலிக்கின்றனார், அதிலே முழு கவனத்தையும் மரியாதையையும் செலுத்துகின்றனர். ஆனால் தூதர்கள் ஆராதனைக்கு உரியவர்கள் அல்ல. குறிப்பிடத்தக்க விதமாக தேவதூதர்கள் தேவனை ஆராதி பதிலும், தேவன் யார் என்றும் தேவன் கிறிஸ்துவின் மூலமாக பூமிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதிலும் கவனமாக இருந்தனர். தூதர்கள் மனிதர்களின் கண்களில் ஆச்சரியமானவர்கள், ஆனால் அவர்கள் தேவனைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேய்ப்பர்களுக்கு அவர்களின் ஆராதனைக்கும் புகழுதலுக்கும் தேவன் தகுதியானவர் என்பதை மேய்ப்பர்களுக்கு இது மிகவும் உறுதியளித்திருக்கவேண்டும்.
ஜெபம்: பிதாவே, நீர் எவ்வளவு அற்புதமானவர் என்பதை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், என் ஆராதனைக்கு நீர் எவ்வளவு தகுதியானவர் என்பதில் என் கண்களை மையமாக வைத்திரும். உம்முடைய மகத்துவத்தின் ஆச்சரியத்தை நான் ஒருபோதும் இழக்க விடமாட்டேன். வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் உம்மை ஆராதிக்க உருவாக்க பட்டுள்ளன. உம்முடைய மகிமைக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More