வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
சிறிய விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாக இருங்கள்
உலகின் பார்வையில் இருந்து வித்தியாசமாக செயல்படுவதையே தேவன் விரும்புகிறார். உலகம் மதிக்கின்ற காரணங்களை தேவன் விரும்புவதில்லை. அவர் அதிகாரத்தை விட மனத்தாழ்மையையும் மற்றும் புகழை விட உண்மையையும் மதிக்கிறார். அவரது மிக பெரிய அதிசயத்தின் இரவில், முதலில் ராஜாக்களுக்கோ அல்லது உலகத் தலைவர்களுக்கோ அதை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் ஒரு தேவதூதனைக் கொண்டு மேய்பர்களுக்கு அந்த நற்செய்தியை தெரிவித்தார். லூக்கா 2: 8 இவ்வாறாக கூறுகிறது "அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்." இதில் அந்த மேய்பர்களின் அர்ப்பணிப்பு, தங்கள் ஆடுகளுக்கு அருகிலே வாழ்ந்து வருவது, மற்றும் அவர்கள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விஷயங்களுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்து கவனித்துக்கொள்வது இவை அனைத்துமே கவனிக்க தகுந்தது. அன்றும் மேய்ப்பர்கள் குறைந்த சமூக நிலைமையில் இருந்தனர், ஆனால் அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தனர், மேலும் தேவன் அவர்களையே வரலாற்றின் மிகப்பெரிய செய்திக்கு முதல் பெறுநர்களாகத் தேர்ந்தெடுத்தார். செய்தியை கேட்ட மாத்திரத்தில், அவர்கள் தேவனுடைய குமாரனை நேரில் சந்திக்க முதலாவதாக வந்தனர்!
இன்று நீங்கள் முக்கியமில்லாதவர்களாகவோ அல்லது கவனிக்கப்படாதவர்களாகவோ உணர்கிறீர்கள் எனில், தேவன் உங்களுக்கு தந்தருளியிருக்கிற தாழ்ந்துகளில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டாம். உங்கள் பணி சிறியது என்று நீங்கள் உணர்ந்தாலும், உங்களுக்கு கிடைத்த அனைத்தையும் கொடுங்கள். சோர்வடைய வேண்டாம்! தேவன் உண்மையுள்ளவர்களைத் தேடுகிறார், உண்மையானவர்களிடமே அவர் இன்னும் பெரிய காரியங்களை ஒப்படைக்க முடியும். இன்று நீங்கள் என்ன செய்ய நியமிக்கப்பட்டிருந்தாலும், அதை உங்கள் முழு பலத்தோடு செய்யுங்கள். தேவன் உங்கள் விடாமுயற்சியைக் காண்கிறார், அவர்க்கு முன்னால் பணியை உண்மையாக முடித்தவர்களுக்கு அவர் வெகுமதி அளிக்கிறார்.
ஜெபம்: அப்பா பிதாவே, உலகம் மதிப்பிற்கு அப்பாற்பட்டதை ஆவிக்குரிய மதிப்பாக கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் எனக்கு என்ன பணியைக் கொடுத்தாலும், முழு மனதுடன் அதை நான் செய்வேன் என்று இன்று தீர்மானிக்கிறேன். உலகத் தரங்களால் சோர்வடையாமல் இருக்க எனக்கு உதவுங்கள், மாறாக, கிறிஸ்துமஸின் அதிசயத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள தாழ்மையான, கடின உழைப்பாளிகளான மேய்ப்பர்களை நீங்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நினைவில் கொள்ள உதவுங்கள். மேய்ப்பர்களைப் போலவே, உங்கள் நற்செய்தியின் பிரசங்கியாக என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. நீங்கள் என்னிடம் ஒப்படைத்தவற்றில் நான் உண்மையுள்ளவனாக இருக்கப்போவதால் எனக்கு மேலும் கொடுக்கப்போகிறதற்கு முன்கூட்டியே நன்றி.
இன்றைய வசனப்படத்தினை பதிவிறக்கம் செய்யஇங்கே.
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More