மனதின் போர்களம்மாதிரி
ஒரு அலைபாய்யும், அலைபாய்யும் மனது
பேதுரு அவருடைய நிருபத்தை எழுதின நாட்களில், ஆண்கள் நீண்ட அங்கிகளைத் தரித்திருந்தார்கள், அது கால்களுக்கு கீழே புரண்டதால் வேகமாக நடக்கவோ, சட்டென்று எதையாவது விரைந்து செய்யவோ முடியாது, இடுப்பிலே அகலமான கச்சைகளை கட்டியிருந்தார்கள். எப்பொழுதெல்லாம் அவசரமாக செயல்பட வேண்டுமோ, அப்பொழுது “அரையைக் கட்டிக்கொண்டு,” அதாவது தங்கள் அங்கிகளை மடித்து, இடுப்பிலே கச்சையில் சொருகிக்கொண்டு, வேலையில் இறங்குவது வழக்கமாகும். நம்முடைய நாட்டிலே, யாராவது சட்டையின் கையை மடித்தார்களானால், ஏதோ களத்தில் இறங்குகிறார்கள் என்று அர்த்தம். அதைப் போலத்தான் இதுவும்.பேதுருவின் வார்த்தைகளும், நம்மை ஏதோ ஒரு காரியத்தை செய்ய ஆயத்தப்படவேண்டும் என்று சொல்வதாக இருக்கிறது.நம்முடைய இலக்கின் மேல் நாம் முழுக்கவனம் செலுத்தவும், நாம் மும்முரமாக செயல்படவும் நமக்கு ஞாபகப்படுத்துவதாகும்.
அளவுக்கு மீறி அலுவலாயிருக்கிற மனம், ஒரு இயல்பான மனதிற்கு எதிராக இருப்பதைக் குறித்து நான் ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். இப்பொழுது வேறொரு காரியத்தையும் குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். அது என்னவென்றால், உங்களுடைய சிந்தனைகளை திசைத்திருப்பி, அலையவிட்டு, உங்கள் இயல்பான மனதை பிசாசு தாக்க முயற்சி செய்வான். அது மனநிலையில் ஏற்படும் ஒரு தாக்குதலாகும். தேவையான, முக்கியமான விஷயத்தில், ஒரு ஒழுங்குடன் உங்கள் மனதை செலுத்தாவிட்டால்; பிசாசானவன் உங்கள் மனதை, எந்த நோக்கமுமில்லாமல், தேவையற்ற மற்ற காரியங்களில் “அலைபாயச் செய்வான்”.
மனதை சீர்படுத்தும் பணியில் நீங்கள் தடுமாறிக்கொண்டிருப்பதால், சில நேரம், “எனக்கு என்னவாயிற்று,” என்று உங்கள் மனநிலையைக் குறித்து வியக்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்கள் மனதை, இஷ்டம் போல “அலைபாய” விடுவதினால்தான் இந்த கஷ்டம், என்பதை உணர அநேக நேரங்களில் நாம் தவறி விடுகிறோம்.
சில நேரங்களில், நம் சரீரத்தில் உள்ள சோகை, அல்லது விட்டமின்-பி போன்ற குறைபாடுகளினாலும், சரியாக கவனம் செலுத்தமுடியாத மனநிலைக்குள்ளாகிறோம். நீங்கள் ஒருவேளை, சரியாக உணவை உட்கொள்ளாமல் இருப்பீர்கள். அல்லது அதிக களைப்பாக இருப்பீர்கள். ஒரு காரியத்தை முடிவு செய்யவேண்டுமானால், அதை எல்லா கோணங்களிலும் ஆராய்ச்சி செய்வது நல்லது. நான் அதிக களைப்பாக இருக்கும்போது, பிசாசனாவன் என் மனதை தாக்க முயற்சிக்கிறான் என்பதை கற்றறிந்திருக்கிறேன். ஏனென்றால், அப்படிப்பட்ட நேரங்களில் அவனுக்கு எதிர்த்து நிற்பது கடினமான ஒன்றாகும்.
கவனக்குறைவும், சில நேரங்களில் நாம் தவறாக அல்லது சரியாக புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு வழிவகுக்கிறது. ஒருவேளை நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, வேகவேகமான வாசித்து விட்டு, வேறு எதையோ செய்யவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கடமை உணர்வினால், ஒரு அதிகாரமாவது வாசிப்போம் என்று வாசிக் கிறீர்கள். ஆனால், நீங்கள் வாசித்ததை மறுபடியும் நினைவிற்குக் கொண்டுவரப்பார்க்கிறீர்கள், முடியவில்லை, எதுவும் ஞாபகமில்லை. உங்கள் கண்கள் என்னவோ, வேதத்தின் பகுதிகளில்தான் பதிந்திருந்தது. ஆனால், உங்கள் மனமோ, வேறு எங்கேயோ, எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
ஒருவேளை, நீங்கள் ஆலயத்திற்கு செல்லும்போதும், அங்கேயும் இதை அனுபவித்திருக்கலாம். நீங்கள் ஆலயத்திற்கு தொடர்ந்து செல்லுவதை, பிசாசினால் நிறுத்த முடியவில்லை. ஆனால், உங்கள் மனதை, செய்தியைக் கேட்காமல், அவனால் அலைபாய செய்ய முடியும். எப்பொழுதாவது செய்தியை முழுவதுமாக, கவனமாக நீங்கள் கேட்கும் போது, திடீரென்று பிரசங்கியார் பேசுவது என்னவென்றே தெரிய வில்லையே என்று திடீரென்று உங்கள் மனம் அங்கில்லாததைக் கண்டு பிடித்திருக்கிறீர்களா?
வேதத்தில்,என்ன வாசித்தோம் என்று தெரியாமலும்; செய்தியைக் கேட்கும் போதும், பிசாசானவன் கர்த்தருடைய வார்த்தையை உங்களிட மிருந்து திருடுவானேயானால்; உங்கள் மனதில் அவன் ஏற்படுத்திய போராட்டத்தில், அவன் பெருமளவு ஜெயித்துவிட்டான் என்றுதான் அர்த்தம். அதனால்தான், “உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு,” என்று பேதுரு இவ்வாறு கூறுகிறார். உங்கள் மனம் “அலைபாயத்” தொடங்கும் போதெல்லாம், வரிந்துக் கட்டிக்கொண்டு பிசாசுக்கு எதிர்த்து நின்று, முக்கியமான காரியங்களில் மனதை செலுத்தும் ஒரு ஒழுங்குக்குள் வாருங்கள்.
நான் யாரோடாவது பேசும் போது, என் மனம் “அலைபாயத்” தொடங்கிவிடும்; நானோ, கவனிப்பது போல ஏமாற்றுவேன். இப்பொழுதெல்லாம் நான் உண்மையாக நடந்துகொள்ளுகிறேன். “தயவு செய்து, நீங்கள் சொன்னதை கொஞ்சம் திரும்ப சொல்ல முடியுமா? என் மனதை நான் அலைபாய விட்டுவிட்டேன். நீங்கள் சொன்ன காரியத்தில் ஒன்றையும் நான் கேட்கவில்லை,” என்று சொல்லுவேன். இது பிசாசின் திட்டத்தையும் நிறுத்தும், நம்முடைய பிரச்சினையின் மேல் நமக்கு வெற்றியையும் தரும்.
தன் இஷ்டத்திற்கு அலைந்து திரிந்த மனதை, ஒரு ஒழுங்குக்குள், ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது எளிதல்ல. ஆனால், நம்மால் அதைச் செய்ய முடியும். எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் “அலைபாய்கிறதை” கவனிக்கிறீர்களோ, உடனே, அந்த நேரமே அதை சரி செய்து, ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும். பிசாசு ஒருவேளை, உன்னால் இதை செய்ய முடியாது என்று சொல்லுவான். ஆனால், நீங்கள் தொடர்ந்து உங்கள் மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, விடாமுயற்சி செய்தால், அவன் தோற்றுப்போவான். நீங்கள் மற்றொரு யுத்தத்தை ஜெயிப்பீர்கள்.
பரலோக பிதாவே, எவ்வளவு எளிதில் பிசாசு என் சிந்தனையைத் திசைத்திருப்பி என் மனதை அலைபாயச் செய்கிறான் என்று உணருகிறேன். அவன் என்னை வழிவிலகி போகச் செய்வதை அனுமதித்த தவறை, எனக்கு மன்னியும். எனக்கு நல்ல, தெளிந்த புத்தியை தந்ததற்காக உமக்கு நன்றி. என் இலக்கை நான் இழந்து விடவேண்டுமென்பதற்காக, பிசாசு கொண்டுவரும் சோதனைகளை மேற்கொள்ள, நீர் எனக்கு உதவி செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/