மனதின் போர்களம்மாதிரி

மனதின் போர்களம்

100 ல் 42 நாள்

சமாதானமுள்ள மனநிலை

என் இரவு வேளைகளில், நாம் அதிகமாக பிசாசின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறோம்? பகல் வெளிச்சம் கடந்து, இருட்டாகி விட்டதாலா? பிசாசிற்கும், இருளுக்கும் சம்பந்தம் இருப்பதின் விளைவா? பகல் நேரத்தில், என்ன நடந்தாலும் ஓரளவு சமாளித்து விடுவோம். ஆனால், இரவு வேளைகளில் அது ஒரு வித்தியாசமான கதையாகி விடுகிறது.

என்னுடைய கருத்து என்னவென்றால், சாயங்காலத்திற்குள் நாம் களைத்து போய் விடுகிறோம். படுத்து, கண்களை மூடி, நன்றாக, நிம்மதியாக தூங்கவேண்டும் என்று விரும்புவோம். நம்முடைய மனதிலே போராட்டங்களை கொண்டுவர, சாத்தானுடைய விருப்பமான நேரமும் இதுதான். நாம் களைத்து, தூக்கத்தோடு இருக்கும் நேரத்தில், சுறுசுறுப்பாக அவனுடைய தாக்குதல்களை சமாளிக்கமாட்டோம் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். நாம் தூங்கி விழும் நேரம் அவன் வேலையைத் துவங்குவான்.

இரவு வேளைகளில்தான், எதிரியானவன் எளிதில் நம்மைத் தாக்க முயற்சிப்பான் என்பதை நாம் கண்டுகொண்டால்; அவனை எதிர்த்து நிற்க நாம் ஆயத்தமாகிவிடலாம். என்னுடைய நண்பர்கள் சிலர்; சில வேத வசனங்களை தியானிப்பதாக சொன்னார்கள். பிலிப்பியர் 4:8, “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவை களோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவை களெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்”. அல்லது, அவர்கள் ஏசாயா 26:3ஐ வாக்குத்தத்தமாக தங்களுக்கு என்று உரிமை பாராட்டுவதாக சொன்னார்கள்.“உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பி யிருக்கிறபடியால், நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” இந்த வேத வசனங்கள் நம்மை, இருண்ட இரவு வேளைகளிலும் விழிப்புடன் இருக்க நமக்கு உதவிச் செய்யும். நாம் பலவீனமாக இருக்கும் வேளைகளிலும், வேதவசனத்தை உபயோகித்து, பிசாசினுடைய தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்.

நாம் வேதத்தை, சர்வாயுதவர்க்கமாக அணிந்து, ஜெபத்தில் நேரத்தை செலவிடாவிட்டால்; நாம் பிசாசின் திட்டத்தின்படி, அவனுடைய வலையில் சிக்குவோம். நம்முடைய நினைவிற்கு அந்த நாளின் நிகழ்ச்சிகளை கொண்டு வந்து, “ஏன் அப்படி சொன்னாய்?” “எப்படி நீ இவ்வளவு உணர்ச்சி சுரணை இல்லாமல் இருந்தாய்?” என்று கேட்பான்.

நாம் எப்பொழுது பெலவீனமாக, அவனுடைய தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவோம் என்று அறிந்து, அவன் காரியங்களை செய்ய முற்படுவான். அவனுடைய நோக்கமெல்லாம், நம்முடைய சிந்தனைகளை சிதறடிப்பதுதான். நம்முடைய சரீரத்திற்கு தேவையான ஓய்வை திருடுவான். அவனுடைய தந்திரம் என்னவென்றால், அந்த நாளில் நாம் சந்தித்த பிரச்சனைக்கு நேராக, நம்முடைய கவனத்தை திசை திருப்புவான். நீ இப்பொழுதே எழுந்து இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டு என்று சொல்லுவான்.

நானும் அநேக ஆண்டுகளுக்கு முன்பு, இப்படிப்பட்ட இரவு வேளைகளை சந்தித்ததுண்டு, எனினும் போராட்டங்களை நான் ஜெயித்ததும் கிடையாது. ஆனால், இப்பொழுது ஒரு முதிர்ச்சி பெற்ற விசுவாசியாக, நான் விசுவாசித்தின் நல்ல போராட்டத்தை எப்படி போராடுவது என்று கற்றுக்கொண்டேன். ஒரு காரியத்தை நான் நன்கு விளங்கிக் கொண்டேன். கூடுமான வரை, நள்ளிரவு நேரங்களிலே, முக்கியமானத் தீர்மானங்களை நாம் எடுக்காமல் இருப்பது நல்லது. சில நேரங்களில், நாம் நம்மை கர்த்தருடைய பாதத்தில் உடனே சரணடைய கர்த்தர் கட்டளையிடலாம். அது ஒரு மிகவும் வல்லமையான நேரம். அதைக்குறித்து நான் சொல்லவில்லை. ஆனால், மற்ற காரியங்களை நாம் தீர்மானித்து முடிவு எடுக்க, காலை வரை காத்திருப்பது நல்லது.

ஒருவேளை, நாம் யாரிடமாவது பதஷ்டமாக எதையாவது பேசி, அன்பில்லாமல், அவர்கள் தேவையை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அது ஒருவேளை நாம் சரி செய்து விடக்கூடிய சிறிய காரியமாக இருக்கலாம். நாம் இரவு படுக்க செல்லும் போதுதான், பிசாசு நம்முடைய கவனத்திற்கு அந்த காரியங்களைக் கொண்டு வந்து; சிறிய காரியங்களையும் பெரிதாகக் காட்டி, அதை அந்த நிமிடமே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் உன்னால் நிம்மதியாக தூங்க முடியாது என்பான். நாமும் தூக்கமிழந்து, ஓய்வெடுக்கவும் முடியாமல் தவிப்போம்.

சாத்தான், இரவு வேளைகளில் அப்படிப்பட்ட தந்திரங்களை என்னிடம் முயற்சி செய்யும்போது, “நான் காலையில் இந்த காரியத்தை, சூரியன் உதித்த பிறகு பார்த்துக்கொள்ளுவேன். நான் இளைப்பாறிய பிறகு என்னால் அதைச் செய்ய முடியும்,” என்று சொல்ல கற்றுக்கொண்டேன். “கர்த்தாவே இதை உம்மிடம் கொடுக்கிறேன். நான் காலையில் எழுந்து சரியான தீர்மானங்களை எடுக்க, உம்முடைய இளைப்பாறுதலையும், உம்முடைய சமானதானத்தையும், தாரும்,” என்றும் ஆண்டவரிடம் சொல்லவும் கற்றுக்கொண்டேன். எனக்கு அது வேலை செய்கிறது.


அன்புள்ள ஆண்டவரே, நீர் என்னோடு இருந்து, என்னை பாதுகாத்து, என்னை வழிநடத்துவதற்காக நன்றி. நான் இருண்ட இரவுகளை சந்திக்கும் போதும், எதிராளியானவன் என்னுடைய மனதைத் தாக்க முயற்சி செய்யும்போதும், என்னை பாதுகாத்துக்கொள்ளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்ளும். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 41நாள் 43

இந்த திட்டத்தைப் பற்றி

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/