மனதின் போர்களம்மாதிரி
சிறந்த திட்டங்கள்
“ஏன் இதைச் செய்தீர்கள்?” என்று ஹெலன் கூச்சலிட்டாள்.
“உங்களால் எப்படி இப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடிந்தது?”
டாம் உதவியற்றவராக, தன்னுடைய மனைவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். விபச்சாரத்தில் ஈடுபட்டு, குற்ற உணர்வுக்குள்ளாகி, தன்னுடைய மனைவியினிடத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.
“அது தவறு என்று உங்களுக்கு தெரியாதா,” என்றாள் அவள்.
“நம் குடும்ப வாழ்க்கைக்கு இந்த செயல் முற்றிலும் துரோகத்தை விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமே.”
“இது இப்படி தவறான உறவில் முடியும் என்று நான் நினைக்க வில்லை”, என்று டாம் கண்ணீருடன் சொன்னார்.
டாம் பொய் சொல்லவில்லை. சில தவறான தீர்மானங்களை செய்கிறோம் என்று அறிந்திருந்தாலும், தன்னுடைய செயலின் பின் விளைவுகளை அவர் சற்றும் யோசித்ததில்லை. ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின், ஹெலன் அவரை சற்று புரிந்துகொண்டு, கடைசியில் மன்னித்து விட்டாள்.
“இப்படி விபச்சாரத்தில் விழுவதற்கு முன், எத்தனையோ முறை நான் உன்னிடத்தில் உண்மையில்லாதவனாக இருந்திருக்கிறேன்.” தன் அலுவலக பிரச்சனைகளை சொல்லும்போதெல்லாம் அவள் அதை கவனிக்காமல் போனதையும், இவருடைய குறை காணும் சுபாவத்தையும், சில நேரங்களில் தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அவள் இணங்காமல் போனதையும், அளவுக்கதிகமாக அலுவலுள்ளவர்களாக இருவருமே செயல்பட்டதினாலே, அவர்கள் இணைந்து நேரத்தை செலவழிக்க முடியாமல் போனதையும் குறித்து அவர் பேசிக்கொண்டிருந்தார். “இவைகள் எல்லாம் சின்ன சின்ன காரியங்கள் தான். ஆரம்பத்தில் சொல்லப்போனால், இவைகள் அப்படித்தான் தென்பட்டன” என்றார் அவர்.
மனிதர்களுடைய வாழ்க்கையில், சாத்தான் இதேவிதமாகத்தான் கிரியை செய்கிறான். யோசனைகள், பயங்கள், சந்தேகங்கள், அதிருப்தி மற்றும் எரிச்சல் என்று விதவிதமான தந்திரங்களை தீட்டி, நம்முடைய மனதை தாக்க ஆரம்பிக்கிறான். சொல்லப்போனால், மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் அவன் முன்னேறுகிறான். (சிறந்த திட்டங்களைத் தீட்ட நேரமெடுக்குமே).
ஹெலன் தன்னிடம் உண்மையான அன்பு செலுத்தவில்லை என்று சந்தேகப்படத் துவங்கினதாக டாம் கூறினார். அவர் பேசும்போது, அவள் கவனிப்பதில்லை. தன்னுடைய விருப்பங்களுக்கு இசைந்து கொடுப்பது மில்லை. அவரோ, இவைகளையே யோசித்துக்கொண்டிருந்தார். இவருக்கு பிடிக்காததை அவள் செய்யும்போதெல்லாம், அதை நினைவில் கொள்வார். இப்படியே நினைத்து, நினைத்து, தன்னுடைய அதிருப்தியின் பட்டியலில் சேர்த்துக்கொண்டே வந்தார்.
அவரோடு பணிபுரியும் ஒரு பெண், அவர் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டாள். “ஹெலனுக்கு உங்களைப் போன்ற அன்பும், பாசமுள்ள மனிதர் தகுதியில்லை,” என்று ஒருமுறை சொன்னாள். (சாத்தான் அவள் மூலம் கிரியை செய்தான்). சரியான பாதையை விட்டு சற்று விலகும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் தான் செய்கிறது சரிதான் என்று தன் மனதில் தானே தீர்மானிப்பார். “ஹெலன் நான் சொல்வதை கவனிக்காவிட்டால் என்ன, எனக்கு செவிகொடுக்க சிலர் உண்டு,” என்று அவர் நினைப்பார். “சிலர்” என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டாலும், உண்மையில், அருகில் பணிபுரியும் அந்தப் பெண்ணைக் குறித்துதான் சொன்னார்.
அந்தப் பெண்ணும் கவனமாக கேட்பாள். சில வாரங்கள் கழித்து, அந்த பெண்ணை அவர் அரவணைத்தார். அப்படி செய்யும்போது, தன் மனைவி இப்படி கரிசனையுடன் நடந்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று வாஞ்சித்தார். அது ஒரு களங்கமற்ற அரவணைப்பு - அது அப்படித்தான் தோன்றினது. சாத்தான் ஒரு போதும் அவசரப்படமாட்டான் என்று டாமுக்கு தெரியவில்லை. அவன் நேரமெடுத்து திட்டங்களை நிறைவேற்றுபவன். அவன் திடீரென, பலாத்காரமாய் தன் வேலையை செய்யமாட்டான். கொஞ்சம் அதிருப்தி, சிறிய அளவிலான பொருளாசை, மோகம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, இதன் மேல் தொடர்ந்து கட்டுவான்.
டாமின் கதை, ஒரு புத்தகக் கடையிலிருந்து, முப்பது லட்ச ரூபாய்களை திருடிய, 42 வயது நிரம்பிய ஒரு பெண்ணின் கதையைப் போல் உள்ளது. “முதலாவது நான் நானூற்று எண்பது ரூபாயைத் தான் எடுத்தேன். என்னுடைய கிரெடிட் கார்டின் குறைந்தபட்ச தொகையை செலுத்த, அது எனக்குத் தேவைப்பட்டது. திரும்ப வைத்துவிடவேண்டுமென்று தான் நினைத்தேன்”. ஒருவரும் அவளை கண்டுபிடிக்காததால், இரண்டு மாதங்கள் கழித்து, அவள் திரும்பவும் “எடுத்தாள்”!
அவளை கையும் களவுமாக பிடிப்பதற்குள், அந்தப் புத்தக கம்பெனி ஏறத்தாழ திவாலாகிவிட்டது. “யாரையும் பாதிக்கவோ, தவறு செய்யவோ நான் எண்ணவில்லை,” என்றாள். அவள் பெரிய அளவில் கொள்ளையடிக்க நினைக்கவில்லை. ஒரு சிறிய தொகையைத்தான் திருட நினைத்தாள். குற்றம் சாட்டின வழக்கறிஞர் - கம்பெனியிலிருந்து அவள் கிட்டதட்ட இருபது வருடமாக திருடிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்தார்.
மெதுவாக, ஜாக்கிரதையுடன் சின்ன, சின்ன விதங்களில்தான் சாத்தான் வேலை செய்வான். நேராக எதிரில் வந்து, எப்போதும் அவன் தாக்குவதில்லை. பரிசுத்தமில்லாத, சுயநல நோக்கம் கொண்ட சிந்தனைகளை நம்முடைய மனதில் நுழைத்து விட தருணம் அல்லது இடைவெளி எப்போது கிடைக்கும் என்று அவன் தேடிக்கொண்டிருக்கிறான். இவைகளை நாம் உதைத்து வெளியேற்றாவிட்டால், அவைகள் அப்படியே, உள்ளேயே தங்கிவிடும். அவனோ, தன்னுடைய கொடிய, அழிவுக் கேதுவான திட்டங்களைத் தொடருவான்.
நம்முடைய மனதிலே இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் குடிகொள்ள நாம் அனுமதிக்கத் தேவையில்லை. “எங்களுடைய போராயுதங்கள்... தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது, அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (2 கொரிந் 10:4,5).
கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தினாலே வெற்றிக்காக கதறுகிறேன். ஒவ்வொரு சிந்தையையும் கீழ்ப்படுத்த எனக்கு உதவி செய்யும். சாத்தானுடைய வார்த்தைகள் என் மனதிலேயே தங்கி, என் வெற்றியை கெடுத்துவிடாதபடிக்கு எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/