BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
இயேசு தன்னை பின்ப்பற்றுகிறவர்களை பார்த்து இப்படியாக கற்றுக் கொடுத்தார், " என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய் சொல்வார்களானால் சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்". இயேசுவின் போதனைகளில் உண்மையான சந்தோஷமானது கடினமான சூழ்நிலைகளிலும் சாகாமலிருக்கும் என்று நாம் பார்க்கிறோம், ஏனெனில் அது சூழ்நிலைகளைச் சார்ந்து இல்லை. அதற்கு பதிலாக தேவன் மற்றும் அவரது மக்களின் நித்திய எதிர்காலத்திற்கான அவரது வாக்குத்தத்தங்களை சார்ந்துள்ளது.
வாசிக்கவும் :
மத்தேயு 5: 11-12, அப்போஸ்தலர் 13: 50-52, எபிரெயர் 12: 1-3
சிந்திக்கவும் :
இந்த பகுதிகளின்படி பார்த்தால், வேதனையான மற்றும் பயமுறுத்தும் சூழ்நிலைகளில் கூட சந்தோஷமானது எவ்வாறு நிலைத்திருக்கும்?
எபிரெயர் 12: 1-3 ஐ மறுபடியும் படிக்க நேரம் செலவிடுங்கள். இயேசு மிகுந்த துன்பத்தையும் சகித்துக் கொண்டார், ஏனென்றால் அவருடைய துன்பத்திற்கு அப்பாற்பட்ட சந்தோஷத்தை அவரால் காண முடிந்தது. இந்த பகுதியில், இயேசுவின் சீடர்கள் அவரை நோக்கி பார்த்தவர்களாய் கஷ்டங்களை சகித்துக்கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்; அவர் அவர்களுக்கு முன்னால் இருக்கும் மகிழ்ச்சியாகிறார். "உங்கள் கண்களை இயேசுவின் மீது பதியவைப்பது" என்பதன் நடைமுறை அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
உங்கள் சிந்தனைகளை உங்கள் இதயத்திலிருந்து தேவனிடம் ஒரு ஜெபமாக மாற்றுங்கள்.
About this Plan
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More