BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
பரிசுத்த வேதாகமத்தின் தேவன் அன்பை வெளிப்படுத்தும் தேவன் மாத்திரம் அல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார். திருத்துவ தேவனாக, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர், அவர் எப்போதுமே மற்றவர்களை மையமாகக் கொண்ட, தன்னையே கொடுக்கும், பொது நலனுக்காக இருப்பார். அன்பு அவரது பண்புகளில் ஒன்று மட்டுமல்ல. அன்பு என்பது அவரது இயற்கையான இயல்பு. தேவ குமாரன் இயேசு, தேவனின் அன்பை முழுமையாக உள்ளடக்கி, மனிதகுலத்திற்காக தனது ஜீவனை கொடுப்பதன் மூலம் மிகத் தெளிவாக இதை வெளிப்படுத்துகிறார். தேவனின் அன்பை மனிதர்கள் நம்ப கற்றுகொள்ளும்போது, அவர்கள் தேவனின் அன்பின் சமுதாயத்தில் சேர்கிறார்கள், மற்றும் அவர்களின் இயற்கை சுபாவம் தேவனோடு சேர்த்து மற்றவர்களை நேசிக்க உருமாற்றம் அடைகிறது.
வாசிக்கவும் :
1 யோவான் 4: 8, 1 யோவான் 4:16, 1 யோவான் 3:16, யோவான் 15: 9-13
சிந்திக்கவும் :
மறுபடியும் சிந்திக்க 1 யோவான் 4:16. தேவன் உங்களை உண்மையாக நேசிக்கிறார் என்று நம்ப நீங்கள் கற்றுக்கொண்டீர்களா?
அப்படியானால், அவருடைய அன்பைப் பெற்ற அனுபவத்தை விவரிக்கவும். தேவன் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் முழுமையாக நம்பத் தொடங்கியதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இன்று, ஒருவருடன் அவருடைய அன்பை எப்படிப் பகிர்ந்து கொள்ள போகிறீர்கள்?
இல்லையென்றால், உங்களுக்கான தேவனின் அன்பைப் பெற நீங்கள் எவ்வாறு போராடினீர்கள் என்பதை விவரிக்கவும். தேவன் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் முழுமையாக நம்பினால், உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
யோவான் 15: 9 ஐ மறுபடியும் சிந்திக்கவும். தேவன் இயேசுவை எவ்வளவு நேசிக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? அதை போலவே இயேசு உங்களை நேசிக்கிறார் என்ற கருத்தை சிந்தியுங்கள். நீங்கள் இதைப் பற்றி சிந்திக்கும்போது என்ன கேள்விகள், எண்ணங்கள் அல்லது உணர்வுகள் வருகின்றன?
இயேசு தனது அன்பை, நீங்கள் வாழக்கூடிய அல்லது "தங்கியிருக்கும்" இடத்துடன் ஒப்பிட்டார். உண்மையாகவே எங்காவது தங்கவேண்டும் என்றால், நீங்கள் முதலில் உள்ளே செல்ல வேண்டும், பைகளை கழட்டி, அந்த இடத்தை புரிந்துகொண்டு அதில் வசதியாக எப்படி செயல்படுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்காவது தங்கும்போது வேறு என்ன செய்வீர்கள்? இதற்கும், உங்கள் மீதான இயேசுவின் அன்பிற்கும், எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்?
உங்கள் வாசிப்பும் பிரதிபலிப்பும் ஒரு ஜெபத்தை தூண்டட்டும். அவருடைய அன்பு உங்களை எப்படி வியக்க வைக்கிறது என்பதைப் பற்றி தேவனிடம் பேசுங்கள், அதைப் பெற நீங்கள் எப்படிப் போராடுகிறீர்கள் என்பதில் நேர்மையாக இருங்கள், இன்று உங்கள் மீதான அவரின் அன்பை நீங்கள் நம்புவதற்கு என்ன தேவைப்படுகிறது என்று உங்களையே கேளுங்கள்.
About this Plan
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More