YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 24 OF 28

தேவனையும் பிறரையும் நேசிக்க வேண்டும் என்ற பிரதான கட்டளையை தேவ ஜனங்கள் மறுபடியும் மறுபடியும் புறக்கணித்தார்கள் என்று எபிரேய வேதாகமம் பதிவிடுகிறது. நாம் எப்படி அதை சிறப்பாய் செய்ய முடியும்? இயேசு ஒரு புதிய கற்பனையை  பிரதான கட்டளையோடு சேர்பதன் மூலம் நமக்கு உதவுகிறார். அவரது புதிய கற்பனை எப்படி அவரின் சொந்த தயாகமான அன்பு மற்றவர்களை நேசிக்க உதவும் என்று தன் சீடர்களுக்கு காட்டுகிறார்.  

வாசிக்கவும் :

யோவான் 13:34 மற்றும் யோசனை செய்ய மாற்கு 12: 29-31 

1 யோவான் 4: 9–11 

சிந்திக்கவும் : 

யோவான் 13:34 மற்றும் மார்க் 12: 29-31 உடன் ஒப்பிட்டு பார்க்கவும். இந்த இரண்டு கட்டளைகளுக்கும் என்ன வித்தியாசம்? இயேசுவின் சொந்த உதாரணம் எப்படி பிரதான கட்டளையை புதுப்பித்து நிறைவேற்றுகிறது?

1 யோவான் 4: 9-11 உள்ள வசனங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். என்ன வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது? இந்த வசனங்களின் படி, இயேசு ஏன் தனது ஜீவனை கொடுத்தார்,  மற்றவர்கள் மீதான நம் அன்பை எது தூண்ட வேண்டும்?

இன்று நீங்கள் கற்றுக்கொண்டதை மனதில் வைத்து சிறிது நேரம் ஜெபியுங்கள்.

Day 23Day 25

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More