BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample
![BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F28560%2F1280x720.jpg&w=3840&q=75)
பழைய ஏற்பாட்டில், எபிரேய வேதாகமத்தின் மிக முக்கியமான கட்டளையைப் பற்றி இயேசுவிடம் கேட்டபோது, "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்பு கூறுவாயாக" என்று ஷேமா என்னும் பண்டைய ஜெபத்தை மேற்கோள் காட்டி பதிலளிக்கிறார். ஆனால் அது மட்டும் இல்லை. இயேசு உடனடியாக " உன்னை நேசிப்பது போலவே பிறனையும் நேசிப்பாயாக" என்ற எபிரேய வேதாகமத்தின் மற்றொரு கட்டளை மிக முக்கியமானது என்று கூறினார். எனவே எது மிக முக்கியமானது? இயேசுவைப் பொறுத்தவரை, இரண்டுமே முக்கியமானவை, ஏனென்றால் முதல் கட்டளையை இரண்டாவதுக் கட்டளையை கவனிக்காமல் கீழ்ப்படிய முடியாது. இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. தேவன் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு மற்றவர்கள் மீது அவர் காண்பிக்கும் அன்பினால் வெளிப்படுத்தப்படுகிறது.
வாசிக்கவும் :
மாற்கு 12: 29-31, உபாகமம் 6: 5, லேவியராகமம் 19:18
சிந்திக்கவும் :
எபிரேய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டிய பிறகு இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவருடைய வார்த்தைகளை நீங்கள் சிந்திக்கும்போது உங்களுக்கு என்ன கேள்விகள், எண்ணங்கள் அல்லது உணர்வுகள் வருகின்றன?
உபாகமம் மற்றும் லேவியராகமத்திலிருக்கும் பகுதிகளை மறுபடியும் தியானியுங்கள். நீங்கள் எதை கவனிக்கிறீர்கள்? இது இன்று உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
உங்கள் சிந்தனைகளை உங்கள் இதயத்திலிருந்து தேவனுக்கு ஒரு பிரார்த்தனையாக மாற்றுங்கள்.
About this Plan
![BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F28560%2F1280x720.jpg&w=3840&q=75)
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More