YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 27 OF 28

உங்களால் தாங்க முடியாத நபரை நீங்கள் எப்படி நன்றாக நடத்துகிறீர்கள் என்பதே உண்மையான அன்பின் இறுதித் தரமாக இருக்கிறது என்று இயேசு கூறுகிறார், அல்லது அவருடைய வார்த்தைகளில், "நீங்கள் உங்கள் எதிரியை நேசிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு எதுவும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்." இயேசுவைப் பொறுத்தவரை, இந்த வகையான அன்பு தேவனின் தன்மையைப் பின்பற்றுகிறது.      

வாசிக்கவும்:  

லூக்கா  6:27-36

சிந்திக்கவும்: 

நீங்கள் எதை கவனிக்கிறீர்கள்? நீங்கள் படிக்கும்போது என்ன கேள்விகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் வருகின்றன?

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ, தங்கள் எதிரி மீது அன்பைக் காட்டியபோது, ​எதையும் எதிர்பார்க்காதபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவில் கொள்ளுங்கள் அல்லது சொல்லுங்கள்.

இந்த வழியில் நேசிப்பவர்களுக்கு இயேசு என்ன வாக்குறுதி அளிக்கிறார் (வசனம் 35 ஐப் பார்க்கவும்)?

நன்றியற்ற மற்றும் தீய மக்களுக்கு தேவன் எவ்வாறு கருணை காட்டுகிறார் என்பதைக் கவனியுங்கள். தேவனின் தன்மையைப் பற்றி இது என்ன சொல்கிறது? நன்றி கெட்ட மற்றும் தீய மக்களுக்கு தேவன் அன்பில்லாதவராக இருக்கும் ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். யாராவது பிழைக்க முடியுமா?

வசனம் 36 இல் தேவன் எவ்வாறு விவரிக்கப்படுகிறார் என்பதை கவனிக்கவும். அன்புக்கும் இரக்கத்திற்கும்  என்ன தொடர்பு?

இயேசுவின் வார்த்தைகள் இன்று உங்களை எவ்வாறு சவால் செய்கின்றன அல்லது ஊக்குவிக்கின்றன? இன்று நீங்கள் தீவிரமாக பதிலளிக்க ஒரு வழி என்ன?

உங்கள் வாசிப்பு மற்றும் பிரதிபலிப்புகள் ஒரு பிரார்த்தனையைத் தூண்டட்டும். தேவனின் இரக்கமுள்ள அன்புக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும், அதே அன்பை மற்றவர்களுக்கு நீங்கள் காண்பிக்காமல் இருந்ததைப்  பற்றி நேர்மையாக இருங்கள். உங்களிடம் தவறாக நடந்து கொண்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், அவர் செய்வது போல் தேவனின் அன்பை தொடர்ந்து அவர்களும் பெற உதவி செய்யுங்கள்.

Scripture

Day 26Day 28

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More