YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 21 OF 28

வேதாகம சந்தோஷம் என்பது இயேசுவின் சொந்த வாழ்க்கை மற்றும் அன்பின் வல்லமை மீதான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழமான தீர்மானமாகும். இயேசுவின் அன்பு மரணத்தையும் வென்றது என்று நீங்கள் நம்பும்போது, ​​இருண்ட சூழ்நிலைகளில் கூட மகிழ்ச்சியானது விசித்திரமாக நியாயமானதாக தெரிகிறது. அதனால் நீங்கள் துக்கத்தை புறக்கணிக்க வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அது ஆரோக்கியமானதோ அல்லது அவசியமோ அல்ல. இழந்து போன தனது அன்புக்குரியவர்கள் அல்லது அவரது சொந்த சுதந்திரம் குறித்து பவுல் அடிக்கடி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர் அதை துக்கம் நிறைந்ததாகவும், ஆனால் அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் நிலை என்று அழைக்கிறார். அவர் தனது வேதனையை ஒப்புக் கொண்டாலும்,  அவருடைய இழப்புகள் ஒரு முடிவாக இராமல் அதற்கு மத்தியிலும் இயேசுவை நம்புவதையே அவர் தெரிந்தெடுக்கிறார். 

வாசிக்கவும் : 

2 கொரிந்தியர் 6:10 

சிந்திக்கவும் : 

உங்கள் வாழ்க்கையில் துக்கம் நிறைந்திருந்தாலும் அதே சமயத்தில் முழுமையாக சந்தோஷமாயிருந்த ஒரு காலத்தை நீங்கள் நினைவுபடுத்த முடியுமா? அப்படியானால், அந்த அனுபவத்தை எப்படி விவரிப்பீர்கள்?

தேவனிடம் ஜெபம் செய்ய இப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள். கொடிய வேதனையையும் மிஞ்சும் அவரது சந்தோஷத்திற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். துன்பத்தின் மத்தியில் எப்படி சந்தோஷமாயிருப்பது என்பதை உங்களுக்குக் கற்பிக்க அவரை அழையுங்கள். நீங்கள் எங்கு போராடுகிறீர்கள் என்பதைப் பற்றி அவரிடம் உண்மையாக கூறுங்கள் மற்றும் உங்களுக்கு என்ன தேவை என்பதை அவரிடம் கேளுங்கள். 

Day 20Day 22

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More