தேவனோடு உரையாடல்மாதிரி
என்னுடைய சிறு வயது நினைவுகளில் மறக்ககூடாத நினைவுகளில் ஒன்று, என் பாட்டி ஈஸ்லீ அவர்களுடைய சமயலறையில் இருந்த ஆடும் நாற்காலி. அவர்கள் சமையலறையை சிவப்பு வண்ணம் பூசியபோது, அந்த ஆடும் நாற்காலிக்கும் சிவப்பு வண்ணம் பூசினார்கள். நான் அநேக நேரம் அதில் அமர்ந்து ஆடி வேடிக்கை பார்ப்பது, ஆடி பாடல் கேட்பதும், ஆடிக்கொண்டே சமையலறையின் அழகை ரசித்ததும் உண்டு.
இன்னமும் என்னால் என் பாட்டியை காணமுடிகிறது, அந்த சமையலறையில் சமைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் அந்த காட்சியை. மக்களோடு இருப்பது என் பாட்டியை இன்னும் அதிக சந்தோஷப்படுத்தும். என்னை அவர்கள் நேசித்தார்கள், அதை நான் அறிந்திருந்தேன், நானும் என் முழு இதயத்தோடும் அவர்களை நேசித்தேன்.
என் பாட்டி ஈஸ்லீ மறித்து அநேக ஆண்டுகள் ஆகின்றது, ஆனாலும் அவர்களோடு அந்த ஆடும் நாற்காலியில் கொண்ட உரையாடல்கள் இன்னமும் என்னை உயர்த்துகின்றன. அவைகள் என் பாரம்பரியத்தின் பங்காக இருக்கின்றன.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி என் தாத்தாவின் ஆடும் நாற்காலியை எனக்கு பரிசளித்தார்கள் - உண்மையில் நான்தான் அது எனக்கு வேண்டும் என்று தொந்தரவு செய்து பெற்றுக்கொண்டேன்! அந்த ஆடும் நாற்காலி என் வீட்டின் நடுவில் இருக்கிறது, புத்தகங்களை சத்தமாக வாசிக்கவும், குடும்பம் நண்பர்களோடு உரையாடவும், என் பேரக்குழந்தையை ஆட்டி தூங்கவைக்கவும் அது உதவுகிறது. நான் அதில் அமராமல் இருக்கும் வேளையில், என் இதயம் அந்த நாற்காலியை தேடி - வாஞ்சிக்கிறது.
அந்த சிவப்பு ஆடும் நாற்காலியில் அமரும்போது என் பாட்டியோடு ஆனந்தமான உரையாடலுக்குள்ளாக கொண்டுவந்ததுபோலவே, அது என் குடும்ப அங்கத்தினர்களோடு என்னை அமரச்செய்வதுபோலவே, வேதாகமத்தை திறப்பது நம்மை தேவனோடு உரையாட வீட்டின் சிறந்த இடத்தில் நம்மை கொண்டுவருகிறது. அவரோடு நாம் அமராமல் இருக்கும்போது, அவருடைய விரிந்த மனது நமக்காக தேடி - வாஞ்சிக்கிறது.
இயேசு நம்மை எவ்வளவாய் நேசித்தார் என்றும் அவரை நாம் எவ்வாறு நேசிப்பதென்றும் அவருடைய வார்த்தையை வாசிக்கும்போது நம்மை இயேசு அழைக்கிறார். அவரோடு நாம் தங்கியிருக்கும்போது, அவருடைய எழுதப்பட்ட வெளிப்பாடு-அவருடைய எண்ணங்களும் திட்டங்களும்-நமக்கு வெளிப்படுகின்றன. யாரெல்லாம் வெளிப்படையாக முழு இதயத்தோடும் அவருடைய வார்த்தைக்குள்ளாக சொல்வார்களோ-அவருடைய ஜீவியம் அவர்களுடைய உலக எண்ணத்தையே மாற்றிவிடும். இயேசு அவருடைய எழுதப்பட்ட வார்த்தைக்கொண்டு நம்முடைய இருதயத்தில் ஜீவனுள்ள பாரம்பரியத்தை எழுதுகிறார். அவர் அதை செய்யும்போது, நாம் மகிமையில் மகிமை அடைகிறோம்.
இந்த திட்டத்தைப் பற்றி
'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
More