தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 7 நாள்

வீட்டிலேயே பிள்ளைகளுக்கு பள்ளிவகுப்பு நடத்தும் ஒரு தாயாக, வெயில்காலத்தில் திட்டம் தீட்டி பாட திட்டத்தை செய்துமுடிக்கும் பழக்கம் எனக்குண்டு. 1999 வெயிலகாலமும் அதைத்தான் நான் செய்தேன், ஆனால் வரும் ஆக்டொபர் மாதம் ஏழாவது நாள் குழந்தையை நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படியால் நான் இன்னும் அதிக கவனமாக அதை செய்தேன். அனைத்து காரியங்களையும் மனதில் வைத்து வேலை செய்வதால் எனக்கு நேரம் இல்லாமல் போனது.

அதிக திட்டமிடுதலுக்கு பிறகு, ஒரு முக்கிய முடிவு செய்ய வேண்டியிருந்தது. நன்கு வயதாகவிருந்த சாமுவேல், பேசும் குறைப்பாடு கொண்டு இருந்தான். அவனுக்கு பேசும் பயிற்சி தேவைப்படும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளி படிப்பின் மத்தியில் ஒரு தொலைபேசி அலைப்புகூட தொந்தரவாக எண்ணப்படும் வேளையில், நாளின் மத்தியில் அவனுடைய பேச்சு பயிற்சிக்காக செல்லவேண்டியிருந்தால் மற்றவர்களின் படிப்பு எல்லாவற்றையும் கெடுத்துவிடும். ஆனால், மறு மார்க்கத்தில், சாமுவேல் பேச்சு பயிற்சி பெற சரியான வயதில் இதுதான் கடைசி ஆண்டாக இருந்தால் என்ன ஆகும், அவனுக்கு உதவி செய்யாமல் நான் சோம்பேறியாக இருக்கிறேனா?

அந்த சனிக்கிழமை மத்தியம் நான் தேவனோடு நடந்து பேச முடிவு எடுத்தது எனக்கு நன்கு நியாபகம் இருக்கிறது. இவ்விதமாக நான் அவரிடம் சொன்னேன்: "எனக்கு இது தெரிய வேண்டும்: இந்த வருடமே சாமுவேலுக்கு பேச்சு பயிற்சி தேவையா, அல்லது அவன் ஐந்து வயதாக நான் காத்திருக்கலாமா?" அவ்வளவு எளிமையாக நேரடியாக கேட்டேன். அமைதி, ஆனாலும் நான் திகைக்கவில்லை. தேவன் நிச்சயம் எனக்கு காட்டுவார். அவர் எப்போதும் என்னிடம் பதில் கொடுத்துள்ளார் ஆகவே நான் பயப்படவில்லை. நான் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்.

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை, எங்கள் குடும்பம் எப்போதும்போல ஆலயத்தில் இருந்தது. செய்திக்கு நேரமான பொது, எங்கள் பாஸ்டர் ஜெசிக்கா மொபட் சூசன்னா வெஸ்லியை (ஜான் வெஸ்லியின் தாய், அவர்தான் பின்னர் மேதொட்டிஸ்ட் சபையை உருவாக்கினவர்) போல நீண்ட உடையை உடுத்திக்கொண்டு ஆலய குடும்பங்களை எல்லாம் ஆச்சரியப்பட வைத்தார்கள். பின்னர் செய்தியில், பத்தொன்பது பிள்ளைகளுக்கு தாயாக இருப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று ஆங்கிலேய பாஷையில் புரிய வைத்தார்கள்! அநேக வேளை தேவனின்மீது சார்ந்து சூஸானா இருந்தார், அவருடைய குமாரன் சாமுவேலுக்காக. நான் நேராக அமர்ந்தேன். "சூஸானா" இன்னும் தொடர்ந்து சாமுவேல் வெஸ்லி ஐந்து வயதாகியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்று சொன்னார். திடீரென ஒரு நாள் தெளிவாக முழு வாக்கியங்களை பேச தொடங்கினான்.

நான் மூன்றாவது வரிசையில் அமர்ந்து, தேவனுடைய சத்தத்தை கேட்டு அதிர்ந்தேன். "சாமுவேல் ஐந்து வயதாகும் வரை பேசவேண்டியதில்லை. பேச்சு பயிற்சிக்கு அடுத்த வருடம் வர காத்திரு." என்ன சமாதானம், என்னுடைய திட்டங்களை நான் சரியாக தீட்ட முடிந்தது. சாமுவேல் அடுத்த ஆண்டு பேச துவங்கினான், சீக்கிரத்தில் சரியாக பேசவும் துவங்கினான்.

தேவன் நாம் தெளிவான நேரடியான கேள்விகளை கேட்டு அவர் சித்தத்தின்படி நடக்கவேண்டும் என்று விரும்புகிறார். அவர் அனைத்தையும் குறித்து உண்மையில் கரிசனையாக இருக்கிறார்.

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer