தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 12 நாள்

வேதாகமம் தேவன் சொப்பனங்கள் மூலம் அவருடைய உணர்வுகளையும் வழிமுறைகளையும் சொன்ன அநேக சம்பவங்களை குறிப்பிடுகிறது. யாக்கோபு, யோசேப்பு (யாக்கோபின் குமாரன்) மற்றும் யோசேப்பு (இயேசுவின் பூமிக்கடுத்த தந்தை). இவர்கள் வெகு சிலரே.

வேதாகமத்தில் குறிப்பிட பட்ட காரியங்களை மதிப்பவராக நான் தேவனிடம் சொப்பனங்களில் என்னோடு பேச வேண்டும் என்று தைரியமாக கேட்கிறேன். அது அநேக வேளை நடப்பதில்லை, ஆனால் தேவன் இந்த தெளிவான விதத்தில் என்னோடு பேசியிருக்கிறார்.

ஒரு அதிகாலை நான் இன்னமும் விலைமதிப்பற்ற ஒரு சொப்பனத்தை கண்டேன். அந்த கனவில், ஒரு காலியான ஆள் நடமாட்டமில்லாத வாகனங்கள் நிறுத்தும் இடத்தை கண்டேன். நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் நண்பர் அவருடைய நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திடம் சென்று, அதன் பின் கதவை திறந்து அவருடைய அடம்பிடித்த குழந்தையை தூக்கி அமர வைத்தார். அந்த சிறு பிள்ளை கோபமாக காலை உதைத்து கொண்டிருந்தது. பொறுமையோடு, மெதுவாக ஆனால் நிச்சயத்தோடு என் நண்பர் அந்த குழந்தையின் எதிர்ப்பின் மத்தியிலும் அந்த இருக்கையில் அமர வைத்தார். முடித்த பிறகு, அவர் சென்று அந்த ஓட்டுனரின் இருக்கையில் சோர்வாக அமர்ந்தார்.

நான் அந்த காட்சியை கண்டபோது, அவருடைய அழுத்தத்தை கண்டு உருகினேன், மற்றும் அவர்களுடைய சோர்வின் மத்தியிலுருந்த கோபம் என்னுடைய இரக்கத்தை பெற்றது. ஒரு வயோதிப தாயாக, எனக்கு உண்மை தெறியும்-இது பெற்றோராக கையாளும் குறுங் காலம் தான். ஆனால் இந்த முதலீடு அவருடைய மகளின் ஜீவியத்தில் கனிகொடுக்கும், அதனால் தாயாக, இதை விட்டுவிட கூடாது.

நான் இந்த உணர்வு அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் என்று எண்ணி, அந்த கனவில் என் நண்பரிடம் கூப்பிட்டு, "விட்டுவிடாதே! தொடர்ந்து இதை பின்பற்று!" என்று சொன்னேன்.

நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அந்த நண்பர் அவருடைய செல் போனில் எதோ சொல்லிக்கொண்டே கேட்கும் குரல் எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் ஞானமான என் பேச்சை கேட்காமல் காரை ஓட்டி சென்றார்.

எழுந்தபோது, நான் அந்த கனவின் நிகழ்வையும் அர்த்தத்தையும் எழுதி வைத்தேன். அந்த காலை வேளையெல்லாம் அதன் அர்த்தத்தை யோசித்து ஜாக்கிரதையாக ஜெபித்தேன்.

சில மணி நேரம் கழித்து, தேவன் அதன் அர்த்தத்தை வெளிப்படுத்தினார்-நான் அதிர்ந்தேன். அந்த கனவில், என் நண்பர் என்னையும், மற்றும் அவருடைய சத்தம் தைரியத்தை கொடுக்க கூடிய சத்தம். நான் என்னுடைய குழந்தை வளர்ப்பில் தவித்து கொண்டிருந்தபோது எனக்கு அந்த கனவு வந்தது. தேவன் எனக்காக அதிகமாக கரிசனைக்கொண்டார் என்பதை உணர்த்தினார். என்னுடைய குடும்பம் இதிலிருந்து விடுபடும் என்று உணர்த்தினார். இந்த கனவின் மூலம் இந்த பாடத்தை மறக்கவே இல்லை.

நாள் 11நாள் 13

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer