தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 9 நாள்

சில வேளைகளில் ஜெபத்தின் அடுத்த படி விட்டு கொடுப்பதுதான். இந்த ஆத்துமாவின் பலிபீடம் நாம் நம்மை விட்டு தேவனுடைய சித்தத்திற்கு விட்டுக்கொடுத்து பலனை அவருடைய அதிகாரத்திற்கு விட்டுவிடும் நேரமும் இடமும் தான். இந்த நேரங்களில் நம்முடைய மிக நெருங்கின பாகங்களை அவருக்கு முன்பாக வைத்து நாம் பின்னாக வர வேண்டியிருக்கும்-அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதபடி. இந்த தனிமையான, அளவிடப்படாத நேரம் அதிக அபாயமாக தோன்றும்.

விட்டுவிடுவது அல்லது ஒப்புக்கொடுத்து தேவனோடு கூட ஒரு அன்பின் உறவில் ஏற்படும் ஜெப நேரம். அவர் இந்த காரியம் நாம் செய்யும்போது அது நமக்கு வலி நிறைந்தது என்று அறிந்தபடியால்-அவர் சொந்த அனுபவத்தில் இதை அறிந்திருக்கிறார்-இயேசு அதனூடில் நம்மை தாங்குகிறார். அந்த விட்டுக்கொடுக்கும் நடவடிக்கையில், ஆவியானவர் நம்மை கிருபையினால் நிரப்பி, அவருடைய பிரசன்னத்தை ஆசீர்வாதமாக தருகிறார். அவர் நாமம் மகிமைப்படுவதாக! நாம் விட்டு விடும்போது, நாம் அவருடைய அன்பின் கரங்களில் விழுகிறோம்.

என்னோடு கொஞ்ச நேரம் நின்று வேதாகம, சரித்திர மற்றும் நிகழ்காலத்தில் நம் ஜீவியங்களை அசைத்திருக்கிற மனிதர்களை நினைவுபடுத்தி பாருங்கள். அவர்களில் நாம் அனைவரும் ரசிக்கும் காரியங்களில் ஒன்று அவர்களுடைய பலிபீட அனுபவம் தான். அந்த நேரத்தில் அவர்களுடைய தீர்மானிக்கப்பட்ட சித்தம் விட்டுக்கொடுக்கப்பட்டு தேவனுடைய உயரமான சித்தத்திற்கு விட்டுக்கொடுக்கும் காரியம் நடைபெற்று, அவர்கள் தங்களையே ஒப்புக்கொடுத்து-அது தியாகமாகவோ பாடுகளானாலோ விட்டுவிடுவார்கள். முடிவில், இந்த விட்டுக்கொடுத்த வேதனை தான் அவர்களுடைய மிக சிறந்த நேரமாகவும், அதை தொடர்ந்து நடைபெறும் காரியங்கள் நிலைக்கும் தாக்கத்தை உருவாக்கும். அதேபோல, நாமும் நம்முடைய தீர்மானிக்கப்பட்ட சித்தத்தை விட்டுக்கொடுத்து தேவனுடைய சித்தத்தையும் அழைப்பையும் ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் ஒரு வீர காவியத்திலோ, ராஜ்யத்தின் சாகசத்திலோ சேர்ந்து, அது நம்மை நாம் யூகித்ததை காட்டிலும் தூரமாக எடுத்து செல்லும்.

ஆனால் இந்த விட்டுக்கொடுக்கும் ஜெபத்தின் மதிப்பை நாம் அறிந்தும் அதை ஜெபிக்க பயப்பட்டால்-அல்லது இதுவரை பயப்பட்டால் என்ன நடைபெறும்? அதற்கு அடுத்து சிறந்த ஜெபம் "தேவனே நான் சித்தமுள்ளவனாக இருக்க சித்தமாயிருக்கிறேன்." இந்த நடுநிலை ஜெபம், அவருடைய வல்லமையை கட்டவிழ்த்து விட்டு அந்த முழு நடவடிக்கையும் நடைபெற செய்கிறது. “ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்” (பிலிப்பியர் 2:13). ஒவ்வொரு விட்டுகுடுக்கும் நிலையிலும் தேவனை நாம் விசுவாசிக்கலாம். அவருக்கு ஒன்றும் கடினம் அல்ல, நமக்கு நெருக்கமான எல்லா காரியமும் அவரிடம் பத்திரமாக இருக்கிறது.

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer