தேவனோடு உரையாடல்மாதிரி
தேவன் நம்மை அவர் சத்தத்தை கொண்டு மேய்ப்பனாக வழிநடத்துகிறார், நாமும் நம்முடைய சத்தத்தினால் அவருக்கு பதில் கூறுகிறோம். தன்னையே வார்த்தை என்று அழைக்கிறவர் பேசுவது என்பது புரிந்துகொள்ளக்கூடியது தான் அல்லவா? நம்மை சிருஷ்டித்து நம்மோடு ஐக்கியம் கொள்ள விரும்பி, நாம் அவரிடம் திரும்ப தன்னையே தியாக பலியாக கொடுத்தவர், நாம் சொல்வதற்கு முன்னமே நாம் என்ன சொல்லப்போகிறோம் என்று அறிந்திருந்தாலும், நம்முடைய குரல் அவரோடு பேச வேண்டும் என்று விரும்புகிறார் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியது தான் அல்லவா?
நல்லபடியாக, இந்த மிக அர்த்தம் நிறைந்த உரையாடல், நம்முடைய நல்ல குணத்தினாலோ, சாதனைகளாலோ, நாம் கேட்கும் கேள்விகளின் தரத்தினாலோ தீர்மானிக்கப்படவில்லை. கேட்பதும், கேட்கப்படுவதும் இயேசுவின் தியாகபலியினால் மாத்திரமே தீர்மானிக்கப்படுகிறது.
உரையாடல் தேவன் நம்மை எட்டி சேரும்போது துவங்குகிறது. தேவன் அன்பாயிருக்கிறார், அவருடைய அன்பு em>நிச்சயம் உறவுக்காக எட்டும். நம்முடைய பொறுப்பு அவருடைய சத்தத்தை அறிந்து பிரதிகிரியை செய்வதுதான். அப்போது அவர் உண்மையுள்ளவராக பதில் அளிக்கிறார். இந்த சூழலில் அவருடைய பிரசன்னத்தில் ஆனந்தித்து, கீழ்ப்படிந்து விசுவாசிக்கவேண்டும். பவுல் "இடைவிடாமல் ஜெபியுங்கள்' என்று சொன்னபோது இந்த நிலைக்கும் உறவைதான் குறிப்பிட்டார் என்று நினைக்கிறன். நாம் ஒன்று தேவனின் சத்தத்தை கேட்கிறோம், அல்லது அவரிடம் ஏதாகிலும் சொல்லி பதிலுக்காக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறோம். இதுவே நம்முடைய ஜீவியத்தின் கடமையும் சந்தோஷமுமாக இருக்கிறது. முடிவில், நாம் உரையாடும் தேவனின்றி ஜீவிக்க முடியாது என்று கண்டுகொள்கிறோம். நாம் கட்டாயமாக ஜெபிக்க தள்ளப்படுகிறோம்.
ஜெபம் சந்தேகமில்லாமல் நம்மை பக்தி விருத்தியாகி, பெலப்படுத்துகிறது. தேவனோடு நாம் கொள்ளும் உரையாடல் நமக்கு ஞானத்தை தந்து சமாதானத்தினால் நிரப்புகிறது. நாம் செல்வது எப்படி என்று அறியாமல் இருக்கும் வேளையில், ஜெபம் சரியான படியாக இருக்கிறது. அது ஒரு இளைப்பாறுதல். அது சுலபமானது. அது நமக்கு ஓய்வை தருகிறது.
நம்முடைய தேவையின் வேளையில் ஒரே பதில் தேவனோடு பேசி அவர் சத்தத்தை கேட்பதுதான். தேவியா - வின் தேவனோடுகூட கொண்ட உரையாடலைப்போல நாமும் நம்முடைய நாளின் பொழுதில் அவர் சத்தத்தை கேட்க்கிறோம். தேவன் எப்போதும் நம்மி அழைத்து நம்முடைய கவனம் அவர்பக்கம் திரும்ப வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார். இந்த உறவில் நாம் சார்ந்துகொள்ள ஏன் நமக்கு இவ்வளவு நேரம் தேவைப்படுகிறது என்று நான் அநேக வேளை யோசித்ததுண்டு. நாம் அவரிடம் திரும்பும்போது அவருடன் பெறுகிறோம் - நம்முடைய பதில்.
இந்த திட்டத்தைப் பற்றி
'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
More