தேவனோடு உரையாடல்மாதிரி
தேவனுடைய சத்தத்தை பகுத்தறிந்து அனுபவிப்பது என் ஜீவியத்தின் மிக சுவாரசியமான செயலாக மாறியிருக்கிறது. அவர் சத்தம் அவருடைய பிரசனத்தையும் அரவணைப்பையும் கொண்டுவருகிறது. அவர் பேசும்போது, அவருடைய அன்பினால் என்னை மூழ்கடிக்கிறார். ஆகவே அவர் சத்தத்தை புரிந்துகொள்வது அவரோடு ஒரு சந்திப்பாக இருக்கிறது.
தேவன் பேசுவார் என்று பயப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் சத்தம் அவர் பிரசன்னத்தை கொண்டு வரும், அவர் எப்போதும் கருணைக்குணம் கொண்டவர் - அவர் நிறுத்தும்போது கூட, இதை நான் என் அனுபவத்தினால் அறிந்துகொண்டேன். அவர் ஒரு மணவாளன் மணவாட்டியை கணப்படுத்துவதைப்போல கணப்படுத்துகிறார். அவருடைய நித்திய நற்குணம் அவரை விசுவாசிக்க எனக்கு கற்றுத்தருகிறது.
எனக்கு தேவன் பேசுகிறார் என்ற முதல் அடையாளம் அவர் என் கவனத்தை ஈர்க்கும்போது உண்டாகிறது. சிலவேளை அவருடைய உரையாடல் தெளிவாக ஐயூர்க்கும். ஆனால் அவர் வார்த்தைகள் என்னுடைய எண்ணங்களைப்போலவும் யூகங்களைப்போலவும் என்னை சுற்றிலும் இருக்கிறவர்கள் எண்ணங்கள் போலவும் தோன்றும். அப்போது நான் யோசிப்பேன், "இது தேவன் பேசும் சத்தமா, அல்லது என் சொந்த மனது ஆசைகளால் ஏமாற்றப்படுகின்றேனா?”
அவர் சத்தத்தின் இந்த குழப்பத்தை குறித்து தேவனிடம் கேட்டேன். அவர் வெளிப்படுத்தியது என்னை ஆச்சரியப்படுத்தினது. அவர் சொன்னார் தொன்னுத்தியொன்பது சதவீதம் நான் அவர் சத்தம்தானா என்று யோசிக்க நேரம் எடுத்தபோதெல்லாம் அது அவருடைய சத்தமாகத்தான் இருந்தது. நான் பயந்து போனேன், ஏனென்றால் அவருடைய மெல்லிய குரலை நேரடியான கீழ்ப்படியாமையினால் தள்ளிப்போட்டிருக்கிறேன். ஆகவே நான் புரிந்துகொண்டேன்: நான் நின்று "இது தேவனா?" என்று யோசித்தால் - அது தேவன் தான்.
இப்போது நான் தேவனுடைய உரையாடலுக்காக காத்திருக்கிறேன். அவருடைய எண்ணங்கள் தெளிவான ஞானம், என்னுடைய இயற்கையான எண்ணங்களுக்கு நேர் எதிரானது. அவர் பேசும்போது, அவர் கனிகொடுக்க சத்தியத்தை கொடுக்கிறார், என் புரிந்துகொள்ளுதலை விரிவடைய செய்கிறார். புதிய வெளிப்படுத்துதலின் மத்தியில், என் எண்ணங்கள் எதிர்பார்காதவிதமாக மாறுகின்றன.
என் ஆவி அவருடைய பேச்சை புரிந்து, அவர் சமூகத்தை உணரும்போது, அவர் சமாதானம் எனக்குளாக வந்து பெருகுகிறது, அல்லது சந்தோஷ பெருவெள்ளம் புரண்டோடுகிறது. கண்ணீர் எண்ணில் பாயும். அது எங்களை அடுத்த உரையாடலுக்குள்ளாக கொண்டுசெல்லும்.
இந்த திட்டத்தைப் பற்றி
'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
More