தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 2 நாள்

தேவன் நம்முடைய ஜீவியங்களில் அசைவாட விரும்பும்போது, வெளிப்படுத்துதல் ஒவ்வொரு நாளும் - அல்லது சனபொழுதிலும்கூடட புதிதாக தோன்றும், நாம் அதன்மூலம் நமக்கு முற்றிலும் தெரியாமல் இருந்த சூழ்நிலைகளூடாக விசுவாசத்தோடும் நடைமுறையாகவும் செல்ல முடியும். இதுதான் என்னுடைய ஜீவியத்தில் ஆவிக்குரிய உயிர்மீட்சியின் சாட்சியாக இருக்கிறது.

நான் தேவனுடைய பிள்ளைகள் எல்லாரும் பரிசுத்த ஆவியானவரோடு ஒரு தனிப்பட்ட உறவுக்குள்ளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொண்டபோதுதான் இது துவங்கியது. நான் வேதத்தில் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி வாசித்திருக்கிறேன், அவருடைய ஈவுகளை பற்றி அறிந்திருந்தேன், அவர் சமூகத்தை மகிழ்த்திருக்கிறேன், அவருடைய கனியில் சிலவற்றை பெற்றிருந்தேன், ஆனாலும் அவரை அறிந்திருக்கவில்லை. நான் எப்படி பரிசுத்த ஆவியானவரின் உறவைப்பற்றி அறியாமலிருந்தேன் என்று எனக்கு தெறியவில்லை. நான் பரிசுத்த ஆவியானவரை என்னோடு இருக்கும் தேவனாக அறிய விரும்பினேன். ஆனால் மூன்று பிள்ளைகளின் தாயாக எனக்கு நேரமும் பெலனும் தேவனை தடையில்லாமல் ஆழமாக தேட உண்டாயிருக்கவில்லை.

நான் என் வீட்டின் வாகன நிறுத்தும் இடத்தில் படிக்க புத்தகங்கள், ஒரு நாற்காலி, ஒரு மேஜை, மற்றும் காலை 4:30-க்கு எழுப்பி விட ஒரு கடிகாரத்தையும் அமைத்தேன். ஆம் காலை 4:30 தான். நான் அவ்வளவு பசிதாகத்தோடு இருந்தேன்.

அந்த கடிகாரம் என்னை எழுப்பிவிடும்போதெல்லாம் நான் என்னோடு பேசி நான் தேடுவதன் முக்கியத்துவத்தை எனக்கே நான் உணர்த்துவேன். அந்த வாகன நிறுத்தும் இடம் என்னை திரும்ப தூங்க சொல்லும்படி அமைந்திருந்தது. அதிக கொசுக்கள் நிறைந்த இடம் அது. என் கண்கள் சரியாக காணக்கூடாமல் தூக்க கலக்கத்தில் இருக்கும். நான் வந்துவிட்டேன், இனி என்ன? தேவனுடைய ஆவியானவரை ஒருவர் அறிந்து கொள்வது எப்படி?

எப்போதும் செய்வதுபோல நான் பாடி, வேதம் வாசித்து என்னை தூங்க விடாமல் இருக்க சத்தமாக இவைகளை செய்வேன். ஆனால் சில மாதங்கள் கழிந்து என்னுடைய ஒழுக்கத்தை விரும்ப துவங்கினேன். என் பிதாவின் நோக்கத்தை அறியவும் எனக்கு அதை வெளிப்படுத்தவும் நான் பரிசுத்த ஆவியானவர் மீது சார்ந்திருக்க கற்றுக்கொண்டேன். வேதாகமம் உயிர்பெற்றது, பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தினார். ஜெபம் தைரியத்தை பெற்றுக்கொண்டது - தேவன் என் ஜெபங்களுக்கு பதில் தந்தார்.

அந்த ஆரம்ப நாட்களின் கஷ்டங்களில், நான் என் தீர்மானத்தை மாற்றிக்கொள்ள சோதிக்கப்பட்டேன். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையான, தொடர்ச்சியான அழைப்பை நான் கீழ்ப்படிந்தபோது, அவர் அவரை ஒரு மனிதனை நேசிப்பதுபோல நேசிக்க கற்றுக்கொடுத்தார். இப்போது நான் ஒரு திவ்விய அன்பின் உறவுக்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன்.பரிசுத்த ஆவியானவரோடு, அவர் அந்த உரையாடலின் ஜெபத்தை துவக்குகிறார்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer