குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
“அவர் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால்” என்கிற வாக்கியத்தை கவனியுங்கள். பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரெய மொழியில் எழுதப்பட்டிருப்பதால், அந்த எபிரெய வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ளும் போது, நாம் படிக்கிற இந்தக் காரியத்தை இன்னும் ஆழமான விதத்தில் நாம் விளங்கிக் கொள்ள முடியும். கட்டளை என்பதின் எபிரெய வார்த்தை “மிட்ஸ்வா” (Mitzvah) என்பதாகும். மிட்ஸ்வா என்றால், “கட்டளை, சட்டம், நியமம், ஒழுங்கு, நீதியின் செயல், கற்பனை” என்று அர்த்தமாகும். எசேக்கியேல் 39:15ல் வரும் ‘அடையாளம்’ (வழிகாட்டி) என்னும் சொல்லின் மூல வார்த்தையும் மிட்ஸ்வா தான்.
இந்த வார்த்தையின் பல்வேறு அர்த்தங்களை பார்க்கும்போது, தேவனுடைய வார்த்தை நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் மட்டுமல்லாது, நம்முடைய மனம் மற்றும் சரீரத்துக்கடுத்த விசயங்களில் கூட ஒரு அடையாளமாக (வழிகாட்டியாக) இருந்து நம்மை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை நாம் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
தேவனுடைய வார்த்தயை கவனியாமல், அதை அலட்சியமாக எண்ணும்போது. நம்முடைய சரீரத்தில் பாதிப்பு ஏற்பட அது காரணமாகி விடுகிறது. எப்படி என்றால், நாம் வெதுவெதுப்பாக ஏனோதானோ என்று இருக்கும்போது, சாத்தான் நம்முடைய வாழ்க்கையில் நுழைவதற்கு நாமே வாசலை திறந்து கொடுத்து விடுகிறோம்.
தேவனுடைய சத்தத்துக்கு செவிகொடுக்க கேட்கத்தக்க காதுகள் நமக்கு அவசியம் வேண்டும் (வெளிப்படுத்தல் 2:11) தேவன் எப்போதும் தம்முடைய ஜனங்களோடு பேசியிருக்கிறார்; அவர் உங்களோடும் இன்றைக்கு பேசுவார். எனவே அவருடைய சத்தத்தை கேட்பததற்கு உங்களை பண்படுத்திக் கொள்ளுங்கள். நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பது நிச்சயமாக அவருடைய சித்தம்தான் (யோவான் 1௦:27). தேவனுடைய வார்த்தையின்படி நடந்து, பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி வாழ்ந்து, ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் வளர்ச்சியடையும்போது, தேவன் எப்போது பேசுகிறார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.