குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
தேவ ஜனங்கள் வாகுத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போகும் வழியில் தேவன் அவர்களுக்கு தம்மை எகோவா-ரோஃபேகா என்னும் நாமத்தின் மூலமாக வெளிப்படுத்த தீர்மானித்தார். எகோவா ரோஃபேகா என்னும் எபிரெய வார்த்தைக்கு சரியான அர்த்தம் “நானே உன் வைத்தியராகிய கர்த்தர்”. அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை தேவன் குணமாக்குகிறார் என்பதை மட்டுமல்ல, நோயுற்றவர்களை ஆரோக்கியமடையச் செய்து, தொடர்ந்து அவர்கள் ஆரோக்கியமாக வாழ உதவி செய்கிறார் என்பதையும் எகோவா ரோஃபேகா என்கிற நாமத்தின் மூலமாக அவர் வெளிப்படுத்துகிறார்.
நம்முடைய சரீரத்தை உருவாக்கின வைத்தியராகிய கர்த்தரிடத்தில் நம்முடைய உடல் நிலையைக் குறித்து ஆலோசிப்பது அற்புதமானது என்று நான் நம்புகிறேன் (எரேமியா 1:5). உங்களுடைய சரீரத்தின் அதிமுக்கிய உறுப்புகளாகிய கண்கள், இருதயம், நுரையீரல், ஈரல், Pancreas போன்ற உறுப்புகளை உருவாக்கின சிருஷ்டிப்பின் தேவனாகிய அவரிடத்தில் ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஆரோகியமான எலும்பு மஜ்ஜை இரத்த அணுக்களின் உற்பத்தியைக் குறித்தோ அல்லது கண்களைக் குறித்தோ அல்லது இருதயத்தைக் குறித்தோ, ஜெபத்தின் மூலமாகவும் உபவாசத்தின் மூலமாகவும் கலந்து ஆலோசிப்பதுதான் நீங்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம்.
இப்படிச் சொல்வதால் மருத்துவ தொழிலை அவமதிப்பதாக எண்ணவேண்டாம். தேவனுடைய வார்த்தையிலிருந்து சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இடங்கொடுங்கள். என்னோடு சேர்ந்து கோஞ்சம் சிந்தியுங்கள். பேறு காலத்தில், பிறக்கப் போகும் பிள்ளையைக் குறித்து உங்கள் மகப்பேறு மருத்துவராகிய எகோவாவிடத்தில் ஆலோசனைப் பெற்றால் எப்படியிருக்கும்? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், ரெபெக்காள் தன் வயிற்றுக்குள் மோதிக்கொண்ட பிள்ளைகளைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரித்தாளே, அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஆதியாகமம் 25:23,24).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.