குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
1 சாமுவேல் 1:6, 12-17 வசனங்களில் அன்னாளும், ஆதியாகமம் 17:15-21; 20:17,18; 21:1,2 வசனங்களில் ஆபிரகாமும் செய்தது போல, எகோவாவை மகளிர் நல மருத்துவராக எண்ணி உங்களுடைய உடல் நிலையைக் குறித்து அவரிடம் ஆலோசிக்கலாம் அல்லவா?
அல்லது, எகோவாவை உங்கள் இருதய சிகிச்சை நிபுணராக எண்ணி உங்களுடைய இருதயத்தின் நிலைமையைக் குறித்து அவரிடம் ஆலோசனை கேட்கலாம் அல்லவா? (ஆதியாகமம் 2:21, 22; ஏசாயா 57:15). ஆதியாகமம் 2ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, எகோவா தேவன் முதலாவது இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்பது மட்டும் அல்ல, முதலாவது மயக்கவியல் மருத்துவர் என்பதயும், இருதய அறுவை சிகிச்சையின் போது இரத்தம் உறைந்து விடாமல் இரத்தத்தின் தன்மையை பாதுகாக்கும் மருத்துவம் பயின்ற (Perfusionist) முதலாவது மருத்துவர் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது! அவர் ஒருவரே எல்லாமாயிருக்கிறார் என்பது எவ்வளவு பேரானந்தம்!! எனவே உங்களுடைய சரீர பெலவீனத்தைக் குறித்து தேவனிடம் பேசுங்கள், அவரது ஆலோசனையையும் அறிவுரையையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள் உங்கள் உடல் நிலையைக் குறித்து தெரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும், ஒரு மருத்துவர் உங்கள் உடல் நிலையைக் குறித்து அறிந்து வைத்திருப்பதைக் காட்டிலும், உங்களுடைய உடல் நிலையைக் குறித்து எல்லவற்றையும் மிகவும் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிற இப்பேர்ப்பட்ட விசேஷமான ஒருவரிடம் செல்லுங்கள் என்று தான் சொல்லுகிறேன். மனிதனுக்கு முதல் முறையாக அறுவை சிகிச்சை நடந்தபோது, அந்த பொறுப்பை ஒரு தேவதூதனிடம் கொடுக்காமல் தேவனே அதை செய்ததை எண்ணி நான் மிகவும் பூரிக்கிறேன்!!! அவருக்கே எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக, அல்லேலூயா!
உங்களுடைய எலும்புகளும் மூட்டுகளும் எப்போதும் வலித்துக் கொண்டேயிருக்கிறதே அதுபற்றி எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணராகிய எகோவா தேவனிடத்தில் நீங்கள் விசாரித்ததுண்டா? (சங்கீதம் 34:19,20; நீதிமொழிகள் 16:24; 15:30) அல்லது உங்களுடைய இரத்தத்தின் நிலைமையைக் குறித்து இரத்தயியல் நிபுணராகிய எகோவாவிடத்தில் விசாரித்திருக்கிறீர்களா? உங்களுடைய எலும்பு மஜ்ஜைகள் ஆரோக்கியமான அணுக்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், அவரால் மட்டுமே அதை செய்யமுடியும் (எபிரெயர் 4:12; நீதிமொழிகள் 3:8). உங்கள் சரீரம் எப்பேர்ப்பட்ட விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, உடனடியாக தேவனுடைய வார்த்தைக்கு செல்லுங்கள், உங்கள் வைத்தியராகிய ஏகோவா தேவனிடத்தில் முதலாவது ஆலோசியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.