குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
நான் உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கும் சத்தியங்கள் மிகவும் வல்லமையனவை. தேவன் எப்படிபட்டவர், அவர் உங்களுக்கு என்னவெல்லாம் செய்வார், அவருடைய நாமம் அவரைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதைக் குறித்தெல்லாம் அவருடைய வார்த்தை கூறும் சத்தியங்களை நீங்கள் விசுவாசித்து அப்படியே எற்றுக்கொள்ளும்போது, அவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார் என்று அவருடைய வார்த்தை கூறுகிறதோ அவ்வாறாகவே அவர் உங்களுக்கு ஆகிவிடுகிறார். இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் நான் இந்த சத்தியங்களை உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறேன். மருந்து மாத்திரைகள் குணமாக்குவதில்லை என்று எந்தவொரு மருத்துவரும் சொல்லிவிடுவார். தேவன் மட்டுமே குணமாக்க முடியும். அவர் குணமாக்குவார் என்று நாம் விசுவாசிக்கும்போது, நிச்சயமாக அவர் குணமாக்குவார்.
மருத்துவர்கள் வியாதியின் அறிகுறிகளை மட்டுமே சரிசெய்ய முடியும். ஆனால் முழுமையான சுகத்தை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அவர் அதை செய்யும் விதம் நம்மை வியக்க வைக்கிறது எப்படியென்றால், மனிதனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றுமே அவை இருக்கவேண்டிய சரியான நிலையிலே அல்லது சூழலிலே இருக்குமென்றால், சரீரம் தானாகவே குணமடைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு ஆற்றலை தேவன் சரீரத்தில் வைத்திருக்கிறார். கர்த்தருடைய வார்த்தை, கர்த்தருக்கு பயப்படுகிற பயம் ஆகியவற்றோடு தெய்வீக ஞானமும் இணையும்போது, அது உடலுக்கெல்லாம் ஆரோக்கியமாய், மருந்தாய் இருக்கிறது என்று நீதிமொழிகள் 3:1,7,8 ஆகிய வசனங்கள் கூறுகிறது.
மருத்துவரிடம் செல்வதோ அல்லது மருந்துகள் சாப்பிடுவதே பாவம் என்று வேதம் கூறவில்லை. அப்படிக்கூறும் என்றால், “பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை” (மத்தேயு 9:12) என்ற உருவகத்தை இயேசு பயன்படுத்தியிருக்க மாட்டார். ஆனால் வைத்தியர்களால் எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கிவிட முடியும் என்று நம்புவது பிழைகள் நிறைந்த ஒரு முறைமையில் சாத்தியமில்லை. ஆனால், பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் இயேசுவின் ஊழியத்தைக் குறித்து சுவிஷேங்களில் வாசிக்கும் போதும் சரி, ஒரு காரியம் மிகத் தெளிவாக விளங்குகிறது. அதென்னவென்றால், தேவன் வியக்கத்தக்கவர், அதிசயமானவர்; அவரே இன்றைக்கும் நம்மை குணமாக்குகிறவர் என்பதே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.