குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 13 நாள்

தேவன் எகிப்தையும் அதின் தெய்வங்களையும் நியாயந்தீர்த்தபோது, பிசாசின் முகாமுக்குள் மிகப்பெரிய திகிலும் பயங்கரமும் ஏற்பட்டது. பத்து வாதைகளைக் குறித்தும், அந்த வாதைகள் எந்தெந்த எகிப்திய தெய்வங்கள் மீது வந்த நியாயத்தீர்ப்புகள் என்பதைக் குறித்தும் நீங்கள் மீண்டும் வாசித்துப் பாருங்கள். எகிப்தியர் மீது தேவன் அந்த நியாயத்தீர்ப்பின் வாதைகளை அனுப்பினபோது அவைகளின் தீவிரத்தன்மை குறையவேயில்லை; மாறாக, அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த வாதைகளில் நாம் அடுத்து கவனிக்கப் போவது பத்தாவது வாதையை. அந்த வாதையின்போது, அரண்மனையில் இருந்த பார்வோனின் தலைப்பிள்ளை முதல் எகிப்திய சிறையில் இருந்தவனின் தலைப்பிள்ளை வரை எல்லோரும் மரித்தார்கள், மிருகங்களின் தலையீற்றும் தப்பவில்லை!!

இதை வாதையின் (சாபத்தின்) வடிவில் வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று கூட சொல்லலாம். இதன் மூலம் எகிப்திய வீடுகளில் பிறந்த தலைப்பிள்ளைகள் அனைத்தும் ஒரே இரவில் அழிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு இயற்கையான வல்லமையோ அல்லது ஆவிக்குரிய வல்லமையோ அங்கு எதுவுமே காணப்படவில்லை. அது எப்படி நடக்கும் என்று தேவன் சொன்னாரோ அப்படி நடந்தது. அது எப்போது நடக்கும் என்று தேவன் சொன்னாரோ அப்போது நடந்தது. அது யாருக்கு நடக்கும் என்று தேவன் சொன்னாரோ அவர்களுக்கு நடந்தது. தலைப்பில்லைகளின் வயதில் வித்தியாசம் இருந்திருக்கலாம். ஆனால் குழந்தை முதல் முதியவர் வரை தலைப்பிள்ளைகள் அனைவரும் அன்றிரவு மரித்தார்கள். சாபம் பல தலைமுறைகளை பாதித்தது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இது மனிதர்களுக்கு மட்டும் சம்பவிக்கவில்லை, அந்த சாபத்தின் கீழ் வாழ்ந்த மனிதர்களுக்கு சொந்தமான மிருகங்களுக்கும் சம்பவித்து.

எனவே உபாகமம் 28ம் அதிகாரம் எழுதப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, தேவனுடைய ஆசீர்வாதத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதையல்லாம் இஸ்ரவேல் மக்கள் கண்கூடாக கண்டனர். எகிப்தின் மீது தேவன் அனுப்பின 10 நியாயத்தீர்ப்புகளை நன்றாய் ஆராய்ந்து பார்க்கும்போது, இன்றைய உலகிலும் அப்படிப்பட்ட சாபம் போன்ற சூழ்நிலைகள் இருப்பதை நீங்கள் காணலாம்.

ஆகவேதான் மனித உயிர், ஆரோக்கியம், ஆஸ்தி, மனநிம்மதி போன்ற பல காரியங்களை நாம் இழக்க நேரிடுகிறது. ஒரு தனி மனுஷனுடைய வாழ்க்கையிலே அல்லது ஒரு தேசத்திலோ அல்லது ஒரு கூட்ட மக்கள் மீதோ சாபம் காணப்படும்போது அங்கு அகால மரணம், காலத்திருக்கு முன்னர் ஏற்படும் மரணம், சொத்துக்களை இழப்பது, அசாதாரண சூழ்நிலையினால் நிலத்தின் மதிப்பு குறைவது போன்ற பலவிதமான இழப்புகள் நேரிடுகிறது. அந்த சாபத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் வேதம் கூறும் பரிகாரங்களை உடனடியாக செய்யவேண்டும். இல்லையன்றால், அந்த குடும்பமோ அல்லது தேசமோ முற்றிலும் அழிந்துபோகும் நிலை உருவாகிவிடும்.     

வேதவசனங்கள்

நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.