குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
“துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசாஸ்தலத்தையோ அவர் ஆசிர்வதிக்கிறார்” நீதிமொழிகள் 3:33.
உங்களுடைய தனிப்பட்ட ஜெபம் மற்றும் தியான நேரத்தில் நீங்கள் ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். பேப்பரும் பேனாவும் எடுத்து சங்கீதம் 105:28-36 வரை உள்ள வசனங்களில் காணப்படும் சாபத்தின் தன்மையையும் குணாதிசயத்தையும் எழுதிக் கொள்ளுங்கள். பிறகு அதே அதிகாரம் 37 – 44 வரை உள்ள வசனங்களில் காணப்படும் ஆசிர்வாதத்தின் தன்மையையும் குணாதிசயத்தையும் எழுதிக் கொள்ளுங்கள். தேவ மனுஷனாகிய யோசேப்பின் மீதியிருந்த அபிஷேகத்தின் பலன்களை ஒரு காலத்தில் அனுபவித்த எகிப்திய மக்கள், யோசேப்பின் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ள எந்தவித முயற்சியும் எடுக்காததால், இப்போது சாபத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கீதம் 105ஐ வாசிக்கும்போது இந்த ஆச்சரியமான உண்மை வெளிப்படுகிறது.
ஆனால் யாக்கோபின் சந்ததியரான இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்து, மிகந்த கஷ்டத்திற்குள்ளாகி, எகோவா தேவனை அறிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அறியாதிருந்தும், ஆசிர்வாதத்துக்கும் கிருபைக்கும் பாத்திரவாங்களாகி விட்டார்கள். காரணம், மோசே ஆரோன் எனும் தலைவர்களின் அபிஷேகத்துக்கு இவர்கள் தங்களை கீழ்ப்படுத்தினார்கள். இவர்களுடைய முற்பிதாக்கள் யோசேப்பின் அபிஷேகத்திற்கு கீழ்ப்படிருந்தார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், வனாந்திரத்தில் மோசேயை எதிர்த்த மக்களில் ஒருவராகிலும், யோசேப்பின் எலும்புகள் எகிப்திலிருந்து எடுக்கப்படுவதையோ அல்லது பஸ்கா இரவின் போது ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படுவதையோ எதிர்க்கவே இல்லை. அதன் விளைவாக அவர்களும் மற்ற எல்லா இஸ்ரவேலரும் எகிப்தை விட்டு ஆஸ்தியோடும் ஆரோக்கியத்தோடும் புறப்பட்டார்கள். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவனாகிய மோசேக்கும், தேவனுக்கும் விரோதமாக எழும்பி கலக்கம் செய்து முறுமுறுத்தபோதுதான் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் சாபம் பற்றிக் கொண்டது.
குணமாக்கும் கிறிஸ்துவைக் குறித்தும், தெய்வீக சுகத்தைக் குறித்தும் நான் போதிக்கும் இந்த வல்லமையான சத்தியங்களை ஒரு சில பிரசிங்கியர்கள் மட்டுமே அரிதாக போதிக்கிறார்கள். எனவே குடும்ப சாபங்களை அல்லது பரம்பரை சாபங்களை வேத வசனங்களின் அடிப்படையில் சரி செய்யாமல் போனால், நீங்கள் சரீர சுகத்தை பெற முடியாமல் போவதற்கு அதுவே மிகப் பெரிய ஆவிக்குரிய தடையாகிவிடும். (இதைக் குறித்த அற்புதமான போதனைகளை கொடுத்திருக்கும் டெரிக் பிரின்ஸ், டாம் ஒயிட், பில்லி ஜோ டாஹெர்டி மற்றும் மெர்லின் ஹிக்கி ஆகியோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.