குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 19 நாள்

இந்த ஏரோது மாமன்னனுக்கு ஏரோது அந்திப்பா என்கிற மகன் இருந்தான். அவனுக்கு பாலியல் பாவத்தில் நாட்டம் அதிகம். உபாகமம் 27ம் அதிகாரத்தில் விக்கிரக ஆராதனையைக் குறித்தும் பாலியல் பாவங்களைக் குறித்தும் தேவன் கடுமையாக பேசுவதைப் பார்க்கலாம். பிதாக்களுடைய சாபம் பிள்ளைகளிடத்தில் விசாரிக்கப்படுவதால் அவனுடைய பிள்ளைகள் அனைவரும் பரம்பரை சாபத்திற்குட்பட்டிருந்தார்கள் (எசேக்கியல் 34:7). ஆனால் தேவன் எப்போதும் சாபத்தை முறிக்க விரும்புகிறவர். எப்பேர்ப்பட்ட பெலவீனமாயிருந்தாலும், எவ்வளவு மோசமான பாவமாயிருந்தாலும் சரி, மனந்திரும்புதலும், இயேசுவின் இரத்தமும் அந்த சாபத்தை முறித்துவிடும்.

ஏரோது அந்திப்பா தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி எரோதியாளை திருமணம் செய்துகொண்டபோது, அவனோடு தேவன் இடைபடுவதை மாற்கு 6:14-28 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். யோவான்ஸ்நானகன் அதை எதிர்த்து பிரசங்கித்தான். அதைக் கேட்டு அந்திப்ப கொஞ்சம் மனந்திரும்புவதுபோல தோன்றினாலும், எரோதியாள் அதிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். அந்திப்பா குடித்து வெறித்த நிலையில் இருந்தபோது தன்னுடைய மகள் சாலோமியை அவனுக்கு முன்பாக நடனமாட செய்தாள். அவளுடைய நடனத்தைக் கண்டு மயங்கிய அந்திப்பா அவள் என்ன கேட்டாலும் தருவதாக வாக்களித்தான். அவள் தன் தாயினால் தூண்டப்பட்டு யோவான் ஸ்நானகனின் தலை வேண்டுமென்று கேட்டாள். தனக்குள் இருந்த இருளை யோவானுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் மேற்கொள்ளுவதற்கு பதிலாக, அந்திப்பா தொடர்ந்து சாபத்திலேயே இருந்துவிட்டான். தகப்பனைப் போலேவே அவனும் வன்முறையில் நாட்டம் கொண்டு, யோவானுடைய தலையை வெட்டி, கொடூரமாய் அவனை சாகடித்தான்.

இருந்தாலும், இவன் மீதிருந்த பரம்பரை சாபத்தை முறிப்பதற்கு தேவன் உதவ முன்வருகிறார். ஆகவேதான் இயேசு ஏரோது அந்திப்பா முன்பதாக போய் நின்றார். இந்த எரோதுவுக்கு இயேசுவை குறித்து ஏற்கனவே ஒரு குழப்பம் இருந்தது. இயேசு யோவான் ஸ்நானகனின் மறுபிறப்பு என்று அவன் எண்ணினான் (லூக்கா 9:9; 23:8-9). மனுக்குலத்தின் சாபத்தை முறித்து, பாவத்தையும் பிசாசையும் அழிக்கப்போகிற இயேசு அவனுக்கு முன்பகா வந்து நின்றபோது, அவன் அவரை நிராகரித்து விட்டான். எனவே அவனுடைய சாபம் முறிக்கப்படாமல் போயிற்று.

ஏரோதுவின் மூன்றாம் தலைமுறையிலும் தேவன் சாபத்தை முறிக்க முயற்சி செய்தார். அதைக்குறித்து அப்போஸ்தலர் 12:1-5 வசனங்களில் வாசிக்கிறோம். ஏரோது அகிரிப்பா பேதுருவை சிறையில் அடைத்து வைத்து, அதன் மூலம் யூதர்கள் மத்தியில் அரசியல் ஆதாயம் பெறலாம் என்று எண்ணினான். அனால் பேதுரு சிறைச்சாலையில் இருந்து அற்புதமாக தப்பினான். இந்த அற்புதத்தைக் குறித்து கேள்விப்பட்ட பிறகும் அவன் மனந்திரும்பாமல், அந்த சிறைச்சாலையின் காவலர்களைக் கொன்று போட்டான். அவனுடைய தாத்தா, அப்பா ஆகியோரிடமிருந்த கொடூரமான, வன்முறையைக் கையாளும் குணம் அப்படியே அவனுக்கும் இருந்தது. அவன் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு, பரிதாபமான விதத்தில் ‘புழுப்புழுத்து இறந்தான்’.  

வேதவசனங்கள்

நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.