குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 20 நாள்

கடைசியாக, ஏரோது இரண்டாம் அகிரிப்பா, இவனைக் குறித்து அப்போஸ்தலர் 25, 26 அதிகாரங்களில் வாசிக்கிறோம். இவன் மாமன்னன் ஏரோதுவின் கொள்ளுப் பேரன். பவுலுடைய வழ்க்கை விசாரிக்கும்படி இவன் அனுப்பப்பட்டான். இவர்கள் மீது இருந்த பரம்பரை சாபத்தை நீக்கும்படியாக தேவன் தம்முடைய மிகச் சிறந்த ஊழியர்களை திரும்பத் திரும்ப அவர்களிடம் அனுப்புகிறார்! தேவனுடைய இரக்கம் எப்பேர்ப்பட்டதென்று பாருங்கள்!! பவுல் இவனுக்கு பிரசங்கம் பண்ணி முடித்த பின்பு அகிரிப்பா அவனைப் பார்த்து, “பவுலே நீ என்னை கொஞ்சங் குறைய சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்று கூறுகிறான். துயரமான வார்த்தைகள் அந்த வார்த்தைகள். அருமை நண்பர்களே, உங்களுடைய பரம்பரை சாபம் நீங்க “கொஞ்சங் குறைய”, “ஏறக்குறைய” எல்லாம் உதவாது. ஒன்று முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அது ஏற்றுக் கொள்ளாததற்கு சமம். ஏரோது இரண்டாம் அகிரிப்ப அதை இழந்துபோனான். அவன் நான்காம் தலைமுறை ஏரோது.

இரண்டாம் அகிரிப்பா அந்த சந்ததியில் வந்த கடைசி ஏரோது. நாட்டை ஆண்டு வந்த அவர்கள், எல்லாவற்றையும் ரோமர்களிடம் இழந்தனர். அகிரிப்பா தன்னுடைய ஸ்தானத்தை இழந்தவனாய், வெசுவியஸ் மலையில் ஒரு பண்ணைத் தோட்டத்தை வாங்கி, அங்கு நாடு கடத்தப்பட்டவனாய், அவமானத்தில், வாழ்ந்து மரித்தான். பண்ணை வீடு அமைக்க வெசுவியஸ் மலை ஏற்றதல்ல. ஒருநாள் திடீரென்று எரிமலை வெடித்து, அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் அந்த மலை முழுவதையும் அழித்துபோட, ஏரோதும் அதில் அழிந்து போனான். இதுதான் எரோதுகளின் முடிவு. தேவனுடைய இரக்கத்தை எண்ணிப்பாருங்கள். பரம்பரை சாபத்தை முறிக்க ஒவ்வொரு தலைமுறையிலும் தேவன் முயற்சி செய்தார். ஒவ்வொருவாரோடும் இடைப்பட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் தேவனை நிராகரித்து விட்டார்கள். அதன் பிறகு இன்னொரு ஏரோது எழும்பினான் என்று சரித்திரத்தில் வாசிக்கிறோமா? இல்லை. காரணம், அவர்கள் எல்லோரும் அழிந்து போனார்கள். அவர்கள் மட்டுமல்ல, இதுமேயர் (ஏதோமியர்) கூட ஒரு ஆள் கூட மீதமில்லாமால் அழிந்து போனார்கள். சாபம் அவர்களை பட்சித்துப் போட்டது. பிசாசு உங்களுடைய பரம்பரைக்கும் இதிப்போலவே செய்ய விரும்புகிறான். இந்த சாபத்தை தடுத்து நிறுத்தி, ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிப்பதற்கு  தேவன் ஒரு வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்!!

ஏரோது குடும்பத்தை உதாரணமாக வைத்து பார்க்கும்போது, பரம்பரை சாபத்தை நீக்குவதில் தேவன் மிகவும் கரிசனையோடு செயல்படுகிறார் என்பது விளங்குகிறது. நான்கு தலைமுறைகளாக அவர்களோடு இடைபட்டும், அவர்கள் மனந்திரும்பாததினால், நான்காம் தலைமுறைக்குப் பிறகு தேவன் அவர்களை அழித்துபோட்டார். கானானியரையும் அவர் அவ்வாறே அழித்துபோட்டார். இன்றைக்கு இருக்கும் பாலஸ்தீனாவில் அன்றைக்கு வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், ஏவியர், பெரிசியர், எபுசியர் எல்லோருமே கானானியர்தான். அவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என தேவன் யோசுவாவுக்கு குறிப்பாக கட்டளை கொடுத்தார். ஏனென்றால், இஸ்ரவேல் மக்கள் அவர்களோடு சம்மந்தங்கலந்து பரம்பரை சாபத்தை தங்கள் மேல் வருவித்துக் கொள்ளக் கூடாது என்பதில் தேவன் கருத்தாய் இருந்தார்.  

நாள் 19நாள் 21

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.