குணமாக்கும் கிறிஸ்துமாதிரி

குணமாக்கும் கிறிஸ்து

25 ல் 22 நாள்

இந்த போதனை உங்களுக்கு சொல்லுகிற நற்செய்தி என்னவென்றால், உங்கள் பரம்பரை ஆசீர்வாதத்தை நீங்கள் அறிக்கை செய்வதற்கான வேலை வந்துவிட்டது; அதை ஒவ்வொரு நாளும் சத்தமாக சொல்லுங்கள் என்பதே. நான் இரட்சிக்கப்பட்டபோது விசுவாசத்திலே ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் குடும்பத்திற்குள் எற்றுக்கொள்ளப்பட்டேன். எனவே, எகோவா தேவ ஏன் தகப்பனாகிய ஆபிரகாமை என்ன சொல்லி ஆசீர்வதித்தாரோ அந்த ஆசீர்வாதங்களால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் (ஆதியாகமம் 12:1-3). சந்தர்ப்ப சூழ்நிலைகளும், உணர்ச்சிகளும், உலகத்தின் அபிப்பிராயங்களும் தேவனுடைய வார்த்தையை அவமாக்க முடியாது.

‘நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று தேவன் சொல்லும்போது, உங்களுடைய சூழ்நிலைகள் ஒருவேளை மோசமானதாக இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தை சொல்வதை தாழ்மையோடு அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை எதிர்த்து நிற்க வேண்டாம். தேவனுடைய வார்த்தையை சபிக்கவோ, கேள்வி கேட்கவோ வேண்டாம். ஜனங்களின் கருத்துக்களும், உலகத்தின் யுகங்களும் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போதில்லை! நீங்கள்தான் அதை நிர்ணயிக்கப் போகிறீர்கள். கல்வாரி சிலுவையில் இயேசு சிந்தின இரத்தத்தின் விளைவாக, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு அருளியிருக்கும் ஆசீர்வாதங்களை நீங்கள் அங்கீகரித்து, ஒவ்வொரு நாளும் உங்கள் வாயினால் அவற்றை சத்தமாக அறிக்கை செய்யும்போது, அந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் உங்கள் மீது வந்து பலிக்கும், ஆசீர்வாதங்களால் உங்கள் வாழ்க்கை நிரம்பி வழியும்! 

எபேசியர் 1:5,6, ‘அவருடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக பிரியமானவருக்குள் அவர் நம்மை ஏற்றுக்கொண்டார்’ என்று கூருகிறது. அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? இயேசு தம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தால் உங்களைக் கழுவி, தேவனால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்களாய் மாற்றியிருக்கிறார். ஆதாம் ஏவாள் பாவம் செய்வதற்கு முன்பு தேவனுக்கு முன்பாக எப்படிப்பட்ட நிலையில் நின்றார்களோ, அதே போன்ற நிலையில் நீங்களும் தேவனுக்கு முன்பாக நிற்கத்தக்க விதத்தில் அவர் உங்களை கழுவி சுத்திகரித்திருக்கிறார். ‘பிரியமானவர்’ உள்வட்டத்தை சேர்ந்தவர்: பிதாவாகிய தேவன், தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேவன் தான் அந்த உள்வட்டம். சுருக்கமாய் சொல்லப் போனால், இயேசுவின் இரத்தத்தின் மூலமாக சர்வலோகத்தின் இரஜாவாகிய தேவனுடைய உள்வட்டத்துக்குள் நீங்கள் வரவேற்கப்பட்டு எற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.

எனவே, பெனவீனத்தைப் பேசுவதை, பாவத்தைப் பற்றி பேசுவதை, பயத்தின் வல்லமையை பற்றி பேசுவதை, பிசாசை ஒரு சக்தி என்று எண்ணி பேசுவதை எல்லாம் உடனே நிறுத்துங்கள். தேவனுடைய வல்லமையைக் காட்டிலும் மந்திரமும், பில்லி சூனியமும் பெரியது என்று சொல்லும் அவிசுவாசிகளின் பேச்சை ஆமோதிப்பதை நிறுத்துங்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கும் சுவிசேஷங்களையும் வாசித்துப்பாருங்கள். கலிலேய மனுஷனாகிய நசரேயனாகிய இயேசுவுக்கு முன்பகா பாவம், பயம், வியாதி, நோய், மரணம், அசுத்த ஆவிகள், அசுத்த ஆவிகளின் ஒடுக்குதல், சாத்தான் உட்பட எல்லாமே நடுங்கிப் பணிந்து விலகிச் சென்றன! 

வேதவசனங்கள்

நாள் 21நாள் 23

இந்த திட்டத்தைப் பற்றி

குணமாக்கும் கிறிஸ்து

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.  

More

இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.