குணமாக்கும் கிறிஸ்துமாதிரி
நீங்கள் ஒருவேளை சரீரத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாதவராக இருந்தாலும், தொடர்ந்து உயிருள்ள நாள்வரை நீங்கள் ஆரோக்கியத்தோடும், வெற்றியோடும் வாழ இந்த போதனைகள் உங்களுக்கு நிச்சயமாக உதவும். எனவே தயவுசெய்து யாத்திராகமம் 15:25, 26 வசனங்களுக்கு வேதத்தை திருப்பிக் கொள்ளுங்கள்.
“...அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பர்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால். நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நான் உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்” (யாத்திராகமம் 15:25, 26).
இங்கு ஆங்கில வேதாகமத்தில் ‘If’ என்னும் வார்த்தை பயன்படுத்தபட்டிருகிறது. ‘If’ என்பது நிபந்தனையைக் குறிக்கக்கூடியது. அதற்கு இணையாக தமிழ் வேதாகமத்தில் ‘கைக்கொண்டால்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருகிறது. எனவே, இஸ்ரவேல் மக்கள் தெய்வீக ஆரோக்கியத்த்தில் வாழ்வதும், வியாதிப்படும்போது சுகத்தைப் பெற்றுக் கொள்வதும் நிபந்தனைக்குட்பட்டது என்பதை நாம் ஆறிந்துகொள்ள வேண்டும். பழைய உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரவேல் மக்கள் தெய்வீக சுகத்திலும் ஆரோக்கியத்திலும் வாழ்வதற்கு, தேவன் அவர்களுக்கு நியமித்த நிபந்தனை நான்கு முக்கியமான காரியங்களை மையமாகக் கொண்டிருந்தது. அவை:
1) அவருடைய சத்தத்தை (உரைக்கப்பட்ட வார்த்தையை) கவனமாய் கேட்க வேண்டும்.
2) அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்யவேண்டும் (அதாவது, அவருக்கு முன்பாக நாம் செம்மையாக நிற்க உதவக்கூடிய செயல்கள்)
3) அவருடைய கட்டளைகளுக்கு செவி கொடுக்க வேண்டும் (அதாவது, அவருடைய கட்டளைகளுக்கு எதிரானதாய் இருக்கக்கூடிய எதிலும் கவனம் செல்லக்கூடாது)
4) அவருடைய நியமங்களை கைக்கொள்ள வேண்டும் (அதாவது, எழுதப்பட்ட அவருடைய வார்த்தையை மீற மறுக்க வேண்டும்)
சுருக்கமாய் சொன்னால், அனுதின வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதின்படி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அனுதினமும் நீங்கள் அப்படி வாழ்ந்தால், ஆரோக்கியமாய் இருப்பீர்கள், எகிப்தியர் மேல் வரப்பண்ணின வாதைகள் ஒன்றையும் உங்கள் மேல் நான் வரப்பண்ணேன் ஏனென்றால், “நானே உங்கள் பரிகாரியாகிய கர்த்தர்” என்று தேவன் அவர்களிடம் சொன்னார். எனவே சுகமும், தேவனுடைய வர்த்தைக்கு மனமுவந்து கீழ்ப்படிவதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இன்றைக்கு, கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் புதிய உடன்படிக்கையின் விசுவாசியாகிய நம்முடைய சுகம், கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்களையும், வியாதிகளையும் சுமந்து தீர்த்த இரட்சகர் இயேசு என்பதை விசுவாசிப்பதில் அடங்கியிருக்கிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://christchapel.in க்கு செல்லவும்.