நம்பிக்கைமாதிரி

Trust

4 ல் 4 நாள்

எரேமியா 32:27 மனிதனின் கூற்று: நல்ல யோசனை. ஆனால் எதுவும் நடக்கவில்லை! தேவனின் கூற்று: தேவனால் எதையும் செய்ய முடியும்.

பிலிப்பியர் 4:13 மனிதனின் கூற்று: இதைச் செய்ய போதுமான வலிமையுடன் நான் இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. தேவனின் கூற்று: ஒவ்வொரு சூழ்நிலையையும் கிறிஸ்துவுக்குக் கொடுங்கள், அவர் உங்களுக்காக அதைச் செய்து முடிப்பார்.

பிலிப்பியர் 4:19 மனிதனின் கூற்று: நான் எனது தொழிலிலும் வீட்டிலும் நிலைபெற்ற பின்பு, ஊழியம் செய்வேன். தேவனின் கூற்று: கிறிஸ்துவைப் பின்பற்ற காத்திருக்க வேண்டாம். உங்கள் எல்லா தேவைகளையும் அவர் பூர்த்தி செய்வார்.

நீதிமொழிகள் 11:28 மனிதனின் கூற்று: நான் கடினமாக உழைத்தேன். வெற்றி உண்மையில் நன்றாக இருக்கிறது! தேவனின் கூற்று: உங்கள் சாதனைகளை நம்பாதீர்கள். தேவனை நம்புங்கள்.

நீதிமொழிகள் 21:1 மனிதனின் கூற்று: அரசாங்கத் தலைவர்கள் பயங்கரமானவர்களாக இருக்கலாம்! தேவனின் கூற்று: என்னை நம்புங்கள், நான் இவ்வுலகத்தின் மேலுள்ள கட்டுப்பாட்டை இழக்கவில்லை.

நீதிமொழிகள் 21:31 மனிதனின் கூற்று: நான் காரியங்களைச் நிறைவேற்றும் ஒரு மனிதன்! தேவனின் கூற்று: தயாராக இருங்கள் ஆனால் தேவனில் இளைப்பாறுங்கள்.


தேவனிடம் விசுவாசமாயிருப்பதற்கான ஒரு வழி அவருடைய வார்த்தையை மனப்பாடம் செய்து தியானிப்பதாகும். இந்த வசனங்களில் பெரும்பாலானவை MemLok வேதாகம நினைவக அமைப்பில் உள்ள 500+ முதல் 48+ தலைப்புகளில் இருந்து வந்தவை. MemLok எளிமையானது, எளிதானது மற்றும் அனுபவிக்கதக்கது. இதைப்பற்றிய ஒரு காட்சி குறிப்பு இதை நன்கு அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் அல்லது விண்டோஸ் ஆப்ஸில் பார்க்கலாம். MemLok

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Trust

நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், ​​உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!

More

இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்பை வழங்கியதற்காக MemLok, வேதாகம நினைவக அமைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். MemLok பற்றி மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: www.memlok.com