புனித வாரம்மாதிரி
அமைதி மற்றும் தியானம்
நிசப்தம் நிறைந்ததும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதுமான இந்த நாளுக்கு உன்னை வரவேற்கிறேன்.
நேற்று இரவு இயேசு சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்டார். நமது பாவத்திற்கான தண்டனை முழுமையாக செலுத்தப்பட்டாயிற்று. போராட்டம் முடிந்துவிட்டது, மரணம் வென்றுவிடும் என்பதுபோலத்தான் தோன்றியது. சீஷர்கள் சிதறி இங்கும் அங்குமாக ஓடிவிட்டனர். இயேசுவைப் பின்பற்றியவர்கள் நம்பிக்கையிழந்து, ஏமாற்றமடைந்தனர். சனிக்கிழமைக்கான நம்பிக்கை எங்கேபோனது? அது பிதாவினிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது!
சனிக்கிழமையன்று, இயேசுவின் சரீரமானது கல்லறையில் வைக்கப்பட்டு ரோமானிய வீரர்களால் பாதுகாக்கப்பட்டது, அதுவும் ஓய்வுநாளாக இருந்தது; மாலை 6 மணிக்கு ஓய்வுநாள் முடிவடைந்ததும், நிக்கொதேமு வாங்கிய வாசனைத் திரவியங்களுடன் இயேசுவின் சரீரம் அடக்கம் செய்யத் தயார் செய்யப்பட்டது.
"ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்." (யோவான் 19:39-40)
இந்த நம்பிக்கையளிக்கும் சித்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிக்கொதேமு ஒரு மதத் தலைவராக இருந்தார், அப்படி இருந்தபோதிலும், அவர் தேவதூக்ஷணம் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கௌரவிக்கும் பெரும் சவாலை எடுத்துக்கொண்டார். ஒரு காலகட்டத்தில் நிக்கொதேமு இயேசுவைப் பின்பற்றுபவராக மாறியிருந்தார், இப்போதோ, அவர் தனது நற்பெயரையும் உயிரையும் பணயம் வைத்து, மறைந்திராமல் தைரியமாக வெளியே வந்தார், ஏனென்றால் இயேசுதான் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை அவர் உணர்ந்திருந்தார்! எத்தனை ஒரு அற்புதமான மாற்றம்!
இயேசு கிறிஸ்துவின் சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டபோது, அவர் பரிபூரணமான, குற்றமற்ற பலியைச் செலுத்தி பாவத்திற்கான தண்டனையைச் செலுத்திவிட்டார். உனது நித்திய இரட்சிப்பை உறுதிப்படுத்தும்படி அவர் ஆவிக்குரிய ரீதியாகவும் சரீரப் பிரகாரமாகவும் மரணத்தை வென்றார்:
"உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." (1 பேதுரு 1:18-19)
சனிக்கிழமைக்கான நம்பிக்கை உன் இருதயத்தில் உண்டாகும் மாற்றத்திலிருந்து வருகிறது! அன்றிய தினம் நாம் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை என்று தோன்றியபோது, ஜீவனுக்கும் மரணத்துக்குமான திறவுகோலைப் பாதுகாக்கும் அவரது பணியை இயேசு நிறைவேற்றிக்கொண்டிருந்தார்! நமது ஜீவனும் மரணமும் அந்தத் திறவுகோலில்தான் உண்டு!
நண்பனே/தோழியே, நீ நம்பிக்கை இழந்துவிட்டாயா? உனக்குள் ஏதோ மரித்துவிட்டதாக உணர்கின்றாயா? மனம் தளராதே! கல்லறையை விட இயேசுவின் அன்பு பெரியது என்பதையும் நீ இப்போது எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனையையும் விட இயேசு பெரியவர் என்பதையும் அவரது வரலாறு நிரூபிக்கிறது.
காத்திருக்கும் இந்த நாளில், நான் வீணாகக் காத்திருக்கவில்லை என்று சொல்லி இந்த காத்திருப்பு நாளைக் கொண்டாடு! இயேசு மீண்டும் தமது சுவாசக் காற்றை உன் மீது ஊதுவார், உலகின் நம்பிக்கை மீண்டும் தழைத்து எழும்!
இந்தக் காத்திருப்பு நாளில், தேவனுடைய திட்டத்தைப் பற்றிக்கொண்டு, எதிர்பார்ப்புடன் காத்திரு. (ஏசாயா 40:31) இந்த தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஒருபோதும் மறந்துவிடாதே.
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."
இயேசுவின் மீதான நம்பிக்கையைப் பற்றிக்கொள். உயிர்த்தெழுதல் நிகழப்போகிறது. அதற்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்!
நீ ஒரு அதிசயம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜீவனுள்ள தேவன், தம்மோடு உறவை வைத்துக்கொள்ளும்படியான ஒரு சந்தர்ப்பத்தை மனுக்குலத்துக்கு வழங்கியபோது நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சம்பவங்களை இந்நாட்களில் நினைவுகூர்ந்து, ஜெபத்தோடு சிந்தனை செய்து இப்புனித வாரத்தை செலவிடும்படி உனக்கு அறைகூவல் விடுக்கிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் அவரிடமிருந்து புதிய ஜீவனைப் பெறுகிறோம்! ஆம், அவர் உயிர்த்தெழுந்தார்!
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=holyweek