புனித வாரம்மாதிரி

இயேசுவின் மரணம்
இன்றைய நாள் நாம் அனைவருக்குமே இந்த வாரத்தின் மிகவும் கடினமான ஒரு நாளாகும். இயேசுவின் மரணம் இலகுவாகவும் எளிதான முறையிலும் விவரிக்கக் கூடிய ஒரு உரையாடல் அல்ல, இயேசு உனக்காகவும் எனக்காகவும் செய்த காரியங்களில் நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
வெள்ளிக்கிழமையான இன்று, அவரது மரணத்திற்கு நேராக அவரை நடத்திச் சென்ற அந்தக் கடைசி மணிநேரங்களில் இயேசுவின் பயணமானது துரோகம் நிறைந்ததாகவும் மிகுந்த வேதனையுள்ளதாகவும் மாறியது.
வேதவாக்கியங்களின்படி, இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீஷனான யூதாஸ் ஸ்காரியோத்து, மனமடிவடைந்து வெள்ளிக்கிழமையாகிய அன்றைய தினம் அதிகாலையிலே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டான்.
அன்று காலை 9 மணிக்கு முன்பே, பொய்யான குற்றச்சாட்டுகள், கண்டனம், பரியாசம், அநேக அடிகள், கைவிடப்படுதல் போன்ற அவமானங்களை இயேசு ஏற்கனவே சகித்திருந்தார். பலதரப்பட்ட பரியாசம் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படிக்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இது மனிதகுலம் கண்டுபிடித்த மிகவும் கொடூரமானதும் அவமானம் மிகுந்ததுமான மரண முறைகளில் ஒன்றாகும். இயேசுவின் மரணம் மிகுந்த வேதனை நிறைந்த ஒன்றாக இருந்தது.
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, போர்ச்சேவகர்கள் அவர் மீது எச்சில் உமிழ்ந்தனர், அவரைத் துன்புறுத்தினர், பரியாசம் செய்தனர் மற்றும் முள் கிரீடம் அவரது சிரசில் தரிப்பிக்கப்பட்டது. பின்னர் இயேசு தம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு கல்வாரி மலைக்குச் சென்றார், அங்கு மீண்டும், ரோமானிய சேவகர்கள் அவரை சிலுவை மரத்தில் அறைந்ததால் அவர் பரியாசம் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டார்.
இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தம்முடைய இறுதி வார்த்தைகளாக ஏழு வார்த்தைகளைப் பேசினார். அவருடைய முதல் வார்த்தையானது வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே." (லூக்கா 23:34)
இதுவே அவரது கடைசி வார்த்தை: "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்." (லூக்கா 23:46)
நண்பனே/தோழியே, பேசப்பட்ட அந்த வார்த்தைகள் அனைத்தும் உனக்காகவே பேசப்பட்டன என்று விசுவாசிப்பாயா?
உன்னை மன்னிப்பதற்காகவும், நமது இரட்சிப்புக்கான அவரது பிதாவின் திட்டத்தை தாம் நம்புவதாலும், இயேசு மனித வரலாற்றில் மிகவும் நம்பிக்கைக்குரிய தருணத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்தார்.
இயேசுவின் நாமத்தை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் மரணத்துக்கு நீங்கலாகி நித்திய இரட்சிப்பையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்வார்கள். இது ஒரு அதிசயம்!
புனித வெள்ளி தினமாகிய இன்று, ஒரு உறுதியான அடியை எடுத்து வைத்து முன்னேறுமாறு நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். இயேசுவின் வாழ்க்கையை கனம்பண்ணும் ஒரு திருச்சபையைக் கண்டுபிடித்து, அங்கே சென்று திருவிருந்து பெற்று ஆராதனை செய்ய ஏற்ற அற்புதமான ஒரு நாளாக இந்நாள் உனக்கு அமையட்டும்.
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு நேற்று சொன்னார். (லூக்கா 22:19) இன்று நீ கீழ்ப்படிதலைத் தெரிந்துகொள். திருவிருந்து பெற ஒரு திருச்சபைக்கு உன்னால் நேரடியாகச் செல்ல முடியாவிட்டால், சிறிது நேரம் ஒதுக்கி ஆன்லைனில் புனித வெள்ளி ஆராதனையைப் பார்த்து ஆராதித்து, கிறிஸ்துவுக்குள் உலகெங்கிலும் இருக்கிற உன் சக சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து இந்த நாளில் கிறிஸ்து வழங்கும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்.
நண்பனே/தோழியே, இயேசு உனக்காகத்தான் மரித்தார்! இந்தக் காரணத்திற்காகத்தான் அவர் வந்து உனக்காக பலியானார்:
"நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்." (யோவான் 10:10-11)
புனித வாரத்தின் இந்த வெள்ளிக்கிழமையிலும், இயேசு நமக்கு அளித்த நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் நிஜமாகி வருகிறது. இயேசுவின் வாழ்வை நினைவுகூர்ந்து இன்றே அவரைக் கனம்பண்ணுவோம்.
நீ ஒரு அதிசயம்!
இந்த திட்டத்தைப் பற்றி

ஜீவனுள்ள தேவன், தம்மோடு உறவை வைத்துக்கொள்ளும்படியான ஒரு சந்தர்ப்பத்தை மனுக்குலத்துக்கு வழங்கியபோது நடந்த நிகழ்வுகளைத் தெரிவிக்கும் சம்பவங்களை இந்நாட்களில் நினைவுகூர்ந்து, ஜெபத்தோடு சிந்தனை செய்து இப்புனித வாரத்தை செலவிடும்படி உனக்கு அறைகூவல் விடுக்கிறேன். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நாம் அவரிடமிருந்து புதிய ஜீவனைப் பெறுகிறோம்! ஆம், அவர் உயிர்த்தெழுந்தார்!
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=holyweek
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

சீடத்துவம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

நம்மில் தேவனின் திட்டம்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

ஒரு புதிய ஆரம்பம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
