ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி

Seeking God in Worship

8 ல் 7 நாள்

உரத்த சத்தத்தோடும், ஆடலோடும், பாடலோடும், இசையோடும் நீங்கள் இதுவரை தேவனை ஆராதித்தது இல்லையென்றால், இதுவே உங்கள் நேரம்! மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு தமது பிள்ளைகள் ஏறெடுக்கும் துதியில் நமது தேவன் களிகூருகிறார். இசையோடு, பாடலோடு, நடனத்தோடு, சத்தத்தோடு, மற்றும் உங்களுக்கு தேவன் தந்திருக்கிற எந்த தாலந்தோடும் நாள்முழுவதும் அவரை உற்சாகமாக துதியுங்கள். கர்த்தர் உங்களுக்கு தந்த இரட்சிப்புக்காக அவரை துதியுங்கள்.

நாங்கள் குடும்பமாக ஆராதனை ஒலித்தட்டுகளோடு நடனமாடி தேவனை துதிப்போம். நாங்கள் சத்தமாக பாடி, ஆடி, குதித்து, ஓடி, சிலநேரம் அமர்ந்து தேவனை குறித்து ஒருவரோடுவர் பேசுவதின் மூலம் தேவனை ஆராதிப்போம். இவை அனைத்துமே தேவனுக்கு நாங்கள் செலுத்தும் ஆராதனை தான். இன்று நீங்கள் எப்படி தேவனை ஆராதிக்க போகிறீர்கள்?
நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking God in Worship

நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

More

We would like to thank Amy Groeschel for this devotional. For more information, please visit: www.SoarwithGod.com