ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி
ஒரு மாலை வேளையில் நாங்கள் குடும்பமாக கூடைப்பந்து விளையாட்டை காண சென்றிருந்தோம். விளையாட்டு வீரர்கள் அனைவரும் வண்ணப்பட்டாசுகளின் (கட்டிடத்தின் உள்ளேயே) நடுவே வரிசையாக அரங்கத்திற்குள் வந்தனர். என் பிள்ளைகள் இதனை மிகுந்த ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அரங்கம் முழுவதும் உயர்தர ஒலிபெருக்கிகளாலும் ஒளித்திரைகளாலும் நவீனமயமாக காட்சியளித்தன. ஒலிபெருக்கியிலிருந்து எழும்பிய சத்தம் அரங்கம் முழுவதும் இருந்த பார்வையாளர்களின் கரகோஷத்தை கேட்டுக்கொண்டது.
முழு அரங்கமும் ரசிகர்களின் கோஷங்கள், ஆரவாரம், விசில் என்று சத்தங்களினால் நிறைந்திருந்தது. அனைவரும் ஆச்சர்யமூட்டும் வகையில் தங்கள் விருப்ப அணிக்கு உற்சாகத்தை கொடுத்துக்கொண்டிருந்தனர். நான் சுற்றிலும் பார்த்தபொழுது ஒரு வாலிபன் தனது விருப்ப அணியின் பெரிய தொப்பியை அணிந்திருந்தான். வேறு சில இளைஞர்கள் தங்கள் விருப்ப அணியை குறிக்கும் வண்ணங்களை தங்கள் முகங்களில் பூசியிருந்தனர். வீரர்கள் நன்றாக விளையாடினார்களோ இல்லையோ ரசிகர்கள் அனைவரும் வியாபாரமாக்கப்பட்டிருந்தார்கள். இதுவும் ஒருவிதமான ஆராதனை முறை தான்.
எனது பிள்ளைகளும் விளையாட்டு துறையில் இருந்ததால், தங்கள் விருப்ப அணி மீதான ஒரு ரசிகனின் ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு அணியை உற்சாகப்படுத்தும் ஒரு ரசிகராகவும், அந்த அணியின் வேராகவும் இருப்பது ஆனந்தமான ஒரு காரியம் தான். இதே போன்ற (இதை விட பெரிய) ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தான் தேவன் நம்மிடம் தமக்கென்று எதிர்பார்க்கிறார். நட்சத்திர விளையாட்டு வீரர்களை காட்டிலும், நட்சத்திரங்களை எல்லாம் பெயரிட்டு அழைக்கிற நம் தேவன் எத்தனை அதிகம் கனத்திற்கு பாத்திரர்!
ஒவ்வொரு ஆட்டத்திற்கும் மாறும் வெவ்வேறு ஆட்டநாயகர்களை போல் அல்ல. எல்லா காலங்களிலும், எல்லா நேரத்திற்கும் நித்திய நித்தியமாக அவரே நாயகர்! அவரே அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமானவர். அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்! இருக்கிறவராவே இருக்கிறேன் என்றவர்!
நான் இன்று ஜெபத்தில் கேட்பது ஒன்றே ஒன்று தான். இந்த சிறிய தியான திட்டம் சகல துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரான நமது ஒரே மெய்யான தேவனோடுள்ள உங்களது உறவை வலுப்படுத்தி நீங்கள் இன்னும் ஆராதனையின் ஆழங்களுக்குள் நீந்த உங்களை உற்சாகப்படுத்தட்டும். என்னோடு கூட இந்த ஜெபத்தை நீங்களும் செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை காண்பீர்கள். ஆமென்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
More