ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி
நாம் ஆராதிக்கும் இயேசு கிறிஸ்து யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் அறிந்துகொள்ள புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. (எபேசியர் 1:18-20). குறித்த ஆழமான வெளிப்பாட்டை நாம் பெற்றிருப்போமானால் நமது ஆராதனை முறை இன்னும் சாதாரணமானவைகளாக இருந்திருக்குமோ? தேவன் நாவு தராத கற்கள் அவரை ஆராதிக்க விரும்புகிறதாம்!
லூக்கா 19ம் அதிகாரத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ளும் முறைகளை நான் இங்கு பட்டியலிட விரும்புகிறேன். இயேசுவுக்கு ஆராதனை செலுத்தப்பட்ட முறைகள்: காலதாமதமற்ற முழுமையான கீழ்ப்படிதல், பயபக்தியுள்ள மரியாதை, மிகுந்த சத்தத்தோடு செலுத்தும் துதி.
எங்கள் அன்பு தகப்பனே, உம்முடைய மகிமையின் மகத்துவதங்களின் ஆழங்களை புரிந்துகொள்ள எங்கள் கண்களை திறந்தருளும்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
More