ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி
நான் எப்பொழுதெல்லாம் என் உள்ளத்தில் சோர்வாக, கவலையாக உணர்கிறேனோ, அப்பொழுதெல்லாம் ஒரு அமைதியான இடத்திற்கு சென்று, எனது தஞ்சமும் எனது தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிற தேவனை ஆராதிக்க ஆரம்பித்து விடுவேன்.
உடைக்கப்பட்ட, தாழ்மையுள்ள, உண்மையுள்ள, வாஞ்சையுள்ள உள்ளத்திலிருந்து தான் உண்மையான ஆராதனை வெளிப்படும். தேவனுடைய வார்த்தைக்கு அன்பின் நிமித்தம் கட்டுப்பட்டு கீழ்ப்படிகிற, சத்தியத்தில் நடக்கிற உண்மையான உள்ளம் அது. இந்த கடினமான சூழ்நிலையில் தேவனையன்றி வேறு நம்பிக்கை இல்லை என்பதை நன்கு அறிந்திருக்கும் உள்ளம் அது. அவர் நமது முழுமையையும் விரும்புகிறார் - நமது முழுமையான அன்பு, சிந்தனையின் முழுமை, கலவையான உணர்வுகள், சரீர பெலன்.
ரோமர் 12: 1-2 சொல்கிறது, "அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை."
ஆராதனை எப்படி நமது வாழ்வை முழுவதும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது என்று அறிந்துகொள்ள 1 நாளாகமம் 29ம் அதிகாரத்தை வாசித்து பாருங்கள்.
எந்தெந்த வழியில் நீங்கள் தேவனை ஆராதிக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உங்களது இன்றைய தியானமாக்குங்கள். உங்கள் தியான சிந்தனைகளை நீங்கள் எழுதி வைக்கலாம்.
இந்த திட்டத்தைப் பற்றி
நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
More