ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி

Seeking God in Worship

8 ல் 4 நாள்

இந்த வேத பகுதிகளிலிருந்து தேவனை நாம் ஆராதிக்கும் முறைகளை பட்டியலிடுங்கள். தேவன் உங்களுக்கு எப்படிப்பட்டவராக இருந்திருக்கிறாரோ அதற்கான உங்கள் நன்றியை இந்த ஆராதனை முறைகள் மூலம் செலுத்துங்கள். அவர் சகல துதிக்கும் பாத்திரர்!

தேவனுக்கு நாம் எங்கே இருந்து ஆராதிக்கின்றோம், எந்த கலாச்சார முறையோடு ஆராதிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. நாம் மறுபடியும் பிறந்த மனநிலையோடு, உள்ளத்திலே தூய்மையோடு கூட ஆவியோடும் உண்மையோடும் செலுத்துகிற துதியே அவருக்கு முக்கியம். நான் என்னுடைய அன்றாட அலுவல்களில் ஆராதனை பாடல்களையோ, ஒலித்தட்டு வேதகமத்தையோ ஒலிக்கவிட்டு அதனோடு சேர்ந்து ஆராதிப்பது வழக்கம்.
நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking God in Worship

நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

More

We would like to thank Amy Groeschel for this devotional. For more information, please visit: www.SoarwithGod.com