ஆராதனையில் தேவனை தேடுவதுமாதிரி

Seeking God in Worship

8 ல் 2 நாள்

இந்த சமாரிய ஸ்த்ரீ இயேசுவிடம், ஆராதனைக்கான சரியான இடத்தை குறித்து வினவுகிறாள். அதற்கு இயேசு, ஆவியோடும் உண்மையோடும் தம்மை தொழுதுகொள்வதே உண்மையான ஆராதனை என்று விளக்குகிறார் - வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே தேவனும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தெய்வமான யெகோவா தெய்வத்தின் ஒரே குமாரனான, மேசியா இயேசுவை விசுவாசித்து, அந்த உண்மையோடும் ஆவியோடும் ஆராதிப்பதே உண்மையான ஆராதனை. இதற்கு மாறான எந்தவித ஆராதனையும் சரியான ஆராதனை அல்ல என்று இதன் மூலம் நமக்கு விளங்குகிறது. சகலத்தையும் சிருஷ்டித்த மெய் தெய்வமான யெகோவாவை உயர்த்துவதே உண்மையான ஆராதனை! அவர் ஒருவரே துதிக்கு பாத்திரர்! அவர் ஆவியாயிருக்கிறார்! எங்கும் வியாபித்து இருக்கிறார். அவர் தாம் சிருஷ்டித்த ஒரே ஒரு இடத்திற்குள் தான் துதியை பெற்றுக்கொள்வார் என்றால், அது அவர் தமது தரத்திலிருந்து இறங்கிவிட்டார் என்று அர்த்தம் பெறும். அப்படி அவர் ஒரே ஒரு இடத்தில் தான் துதியை அங்கீகரிப்பார் என்று எண்ணுவதும் அபத்தமாக இருக்குமல்லவா! ஆனால் இன்று அநேக கிறிஸ்தவர்கள் அப்படி தான் நடந்துகொள்கிறார்கள் - தேவன் சபையில் வைத்து நாம் ஏறெடுக்கும் துதியை தான் அங்கீகரிப்பார் என்பது போல, சபையில் மாத்திரமே ஆராதிக்கின்றனர். வாரம் ஒருமுறை சபை ஆராதனைக்கு செல்லும் அந்நேரத்தை தவிர்த்து, வாரத்தின் மற்ற நாட்களில் தேவனை தொழுதுகொள்வதோ ஆராதிப்பதோ இல்லை.

நீங்கள் எங்கே, எப்படி தேவனை ஆராதிக்க விரும்புகிறீர்கள்? ஆராதனையை குறிப்பிட்ட இடத்திற்குள் மாத்திரம் அடைத்திருக்கிறீர்களா? எங்கும் ஆவியோடும் உண்மையோடும் தேவனை தொழுதுகொள்கிற உண்மையான ஆராதனை வீரராக நீங்கள் மாறும் தருணம் இது.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Seeking God in Worship

நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

More

We would like to thank Amy Groeschel for this devotional. For more information, please visit: www.SoarwithGod.com