பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்மாதிரி
பிரார்த்தனை 1: "ஆண்டவரே, என்னை பணிவுள்ளவனாக ஆக்கும்."
தேவனுக்கு முன் பணிவுள்ளவராக இருப்பது மிகவும் முக்கியமானது; "ஆண்டவரே, என்னை பணிவுள்ளவனாக ஆக்கும்!" என்ற சாதாரண பிரார்த்தனை உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடலாம்.
ஆனால், எதையும் போல, தேவனின் உதவியின்றி நாம் தானாகவே பணிவுள்ளவர்களாக ஆக இயலாது! அவரது உதவியின்றி நாம் ஏதுவுமே செய்ய முடியாது. யோவான் 15:5 இல் இயேசு கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: அவருடைய உதவியின்றி நாம் எதையும் செய்ய முடியாது!
நாம் தேவனிடம் பணிவுள்ளவர்களாக ஆக்கக்கோருவது ஏன்?
ஒன்று பேதுரு 5:5-6 நமக்கு கூறுகிறது, தேவன் அகந்தையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் பணிவுள்ளவர்களுக்கு அருள் தருகிறார். தேவனின் வார்த்தை, இயேசு பணிவுள்ளவராக இருந்தார் என்பதையும் காட்டுகிறது; மேலும், நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும்.
பணிவின் பாதையில் ஒவ்வொரு நாளும் புதுமையாகவும் பசுமையாகவும் நாம் இயேசுவிடம் சரணடைய வேண்டும். அப்படி நாம் செய்தோமேனில், நொடிக்கு நொடி இயேசுவில் நிலைத்திருந்தால், அவர் தமது பங்கை செய்வார் - அதாவது நம் இதயங்களை மாற்றி கொண்டு, நம்மை தமது ரூபத்தில் ஒத்தும்படிக்கு ஆக்குவார். நம் இதயங்களை மாற்ற தேவனுக்கு மட்டுமே சக்தியுள்ளது.
பரிசுத்தமான கையையும் தூய்மையான இதயத்தையும் நீங்கள் கேட்டால் தேவன் அதை உங்களுக்கு அருளுவார்.
அவரிடம் இதை நான் பெரும்பால நாட்களில் கேட்டுக்கொள்கிறேன். (நாள் தவறாது கேட்க விரும்பினாலும், சில நேரங்களில் மறந்துவிடுகிறேன்). ஆனால் நான் தேவனிடம் என்னை பணிவுள்ளவனாக்கும்படி கேட்கும் ஒவ்வொரு முறையும், என்னை அவருக்கு இன்னும் நெருக்கமாக இழுப்பதை காண்கிறேன்.
அவர் உங்களுக்கும் இதேபோன்று செய்வார். நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனிடம் உங்களை பணிவுள்ளவராக ஆக்கும்படி கேட்டால், அவர் உங்களை உருமாற்றி, தம்முடன் பரிசுத்தத்திலும் நெருக்கத்திலும் நடக்க உங்களுக்கு உதவுவார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.
More