பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்மாதிரி

5 Prayers of Humility

5 ல் 5 நாள்

பிரார்த்தனை 5: "ஆண்டவரே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை எனக்கு தாரும்.”

தேவனுக்கு எதிராக பாவம் செய்திருப்பேன் என்று எனக்குத்தெரியும் போது படிக்க மிக விருப்பமான சங்கீதம், சங்கீதம் 51.

தெளிவாக, நான் ஒருபோதும் பாவம் செய்ய விரும்புவதில்லை. ஆனாலும், நம்மில் பலரை போலவே, நானும் சில நேரங்களில் பாவம் செய்து விடுகிறேன். என்னை மிகுந்த கட்டுபாட்டில் வைத்திருக்கு மாறு ஆண்டவரை நான் எப்போதும் கேட்பதால், அவருக்கு எதிராய் பாவம் செய்தால் அவரது குற்ற எண்பிப்பு உடனடியாக என்னை வந்தடைகிறது.

சில சமயம், நான் பாவம் செய்கையில், தொடகத்திலேயே எனது இருதயம் உண்மயாகவே மனங்கசிவடையும்.

அந்த தருணங்களில், உடனடியாக மனம் வருந்தி ஆண்டவரிடம் நல்லுறவை பேணுவேன். அவைதான் சுலபமான நாட்கள், ஏனெனில் நாம் பாவமன்னிப்பு கேட்டவுடனே அவர் நம்மை மன்னித்துவிடுகிறார். (1 யோவான் 1:9 ஐ பார்க்கவும்).

ஆனால், மற்ற சில நாட்களில், நான் என் இருதயத்தைத் தேவன்தான் மாற்ற வேண்டும். ஒன்றின் மேல் மிகுந்த கோபம் கொண்டதனால் நான் நடந்து கொண்ட விததிற்கு வருத்தம் படுவதில்லை. அத்தருணங்களில், நான் கர்த்தரிடம் என் இதயத்தை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் - மேலும் என் பாவத்திற்கான நான் உண்மையாக மனநோவுறுவ அருளுமாறு கேட்கிறேன்.

நாம் ஒவ்வொரு நாளும் நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை உள்ளவராய் இருக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.

நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயம் உள்ளவராக இருப்பது என்பதாவது நம் இருதயம் தேவனுபால் இன்கனிவுடன் இருப்பதுவே. நீங்கள் வெறுமனே கிடந்து மன அழுத்ததுடன், “உடைந்த இதயத்தினால் இறப்பது” என பொருட்படாது.

அதின்றி, அதன் பொருள் நீங்கள் இயேசுவின் மேல் காதல்வயபட்ட நிலையை தொடர்ந்துநாடிஇருப்பதுவே.நம் இரட்சகர் மேல் அந்த காதல்வயபட்ட இடத்தில் அவரை நீங்கள் சார்ந்துள்ளதை இடைவிடாமல் ஏலறிவிப்பீர். இயேசுவை நோக்கிய இருதயத்தின் இன்கனிவு அவருடன் ஒரு அன்யோனிய்தை உருவாக்கி சொல்லுவதிர்கினங்கா ஆனந்த்தாலும், நிறைவான மாட்சியாலும் உங்களை நிறப்பும்.

ஆகவே, இன்றே இந்தப் பிரார்த்தனையை செய்யுங்கள்:

"ஆண்டவரே, நீர் அசுவீகரிக்காத நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை எனக்கு அளிப்பீராக!"

ஒவ்வொரு நாளும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து, கர்த்தரைத் தொடர்ந்து நாடுங்கள். அவர் மாத்திரமே உமது இருதயத்தை மாற்றி அவர் முன் உம்மை உண்மையில் பணிவுள்ளவராக்க வல்லவர்.பணிவினை நாடும் உங்கள் பயணத்தில் கூடவே நடக்கும் போது, உங்களுக்கு சிறந்த சம்மானங்களை அளிப்பார்-அவரது மகிமை உங்கள் வாழ்வில் எறுழ்மிகையாய் தெகிழும்.

இந்த பைபிள் திட்டம் உங்களுக்கு உதவியதா? கூடுதல் கருவிகள் மற்றும் வளங்களை நீங்கள் விரும்பினால் எங்களது இணையதளத்தை பாருங்கள்இலவசமான பிரார்த்தனை வழிகாட்டிகள் நூலகம் இங்கே FromHisPresence.com!

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

5 Prayers of Humility

இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபரம் ஷிஸ் பிரசன்ஸ் நிறுவனதிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.fromhispresence.com