பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்மாதிரி
பிரார்த்தனை 2: "எப்படி விரும்புகிறீர்களோ, அப்படியே என்னைத் ஒழுக்கபடுத்தும்.”
நம் ஊனிற்கு இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் பைபிள் நமக்கு கற்றுத்தருவது, தேவனின் திருத்தம் அவரின் அன்பின் அறிகுறியாகும் என்பதே. வெறுப்பிலோ கெட்ட மனப்பானையிலோ, தேவன் நம்மை திருத்துவதில்லை. அவருக்கு நம் பால் அத்தகைய உணர்வுகள்லே கூட இல்லை! நாம் வளர வேண்டும் என்றால் மற்றும் இயேசுவைப்போல் ஆக வேண்டும் என்றால் நமக்கு ஒழுக்கம் தேவை என்பதறிந்த கருணை, தயவு மற்றும் அன்பான தந்தை அவர்.
நம் மேல் அன்புள்ளதால் தான் தேவன் நம்மை திருத்துகிறார்.
அதனால், அவரது சிட்சை கரம் அன்பின் அறிகுறி என்பதால், நாம் அவரது சிட்சைக்காக ஏங்க வேண்டாமா? வலதிலும் இடதிலும் நம் பாததிற்கு சரியான வழி காட்ட மேய்ப்பரின் கைக்கோலை தேட வேண்டாமா?
நண்பரே, நாம் எங்கு செல்ல வேண்டும் என ஆண்டவர் வழிநடத்தும் கரத்தின் மெல்லிய இழுப்பை நீங்கள் உணரவில்லையா? சங்கீதம் 32:8 ல் அவர் நமக்கு வாக்களித்திருப்பதைப் பாருங்கள்.
நிச்சயமாக நாம் உணரவேண்டும்.
நண்பரே, நீங்கள் கர்த்தருக்கு முன் உண்மையாகப் பணிவுடையவர்களாக இருக்க விரும்பினால் அவரது சிட்சயை போய் கேளுங்கள்
.இதில் முன்முயற்சி கொள்வது சரியானதே. "கர்த்தாவே, எப்படி விரும்புகிறீர்களோ, அப்படியே என்னை ஒழுக்கபடுத்தும்" என்று கேட்பது நல்லது
.அவரது ஒழுக்கம் நம்மை மேம்படுத்தும். கூடுதலாக, நமது வழியிலே சென்று தவறான முடிவுகளால் எதிர்பார்காத(அல்லது தேவையற்ற) பின்விளைவுகளை பெறுவதை விட அவரது திருத்தம் மற்றும் ஒழுகத்தை முன்முயற்சியாக கேட்பது நம் வாழ்வை எளிதாக்கும்.
நண்பரே, நாம் தவறாக இருக்கும் போதோ, தீங்கான பாதையில் செல்லுவதற்கான அபாயம் இருந்தாலோ நம்மை திருத்தவும், வழிநடத்தவும் ஒரு பாசமிகு தந்தை உள்ளார். அவரது நேரான மற்றும் குருகிய பாதையில் நீங்கள் செல்ல, இன்றய தினம் அவர் எந்த வழியில் வேண்டுமானாலும் உங்களை திருத்தமாறு கேட்க மாட்டீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.
More