பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்மாதிரி

5 Prayers of Humility

5 ல் 4 நாள்

பிரார்த்தனை 4: "கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நம்ப எனக்கு உதவுங்கள்."

பைபிள் என்பது மனிதகுலத்திற்கான தேவனின் வழுவில்லாத, தவறேதும் இலா வார்த்தை. யோவான் 1-ஆம் அதிகாரம் நமக்கு கூறுகிறது, பைபிள் ஆகசரியாக இயேசுவையேஎழுத்து வடிவில் கொண்டாக்கியுள்ளது!

இது உண்மையே: இயேசுவே வசனம், மற்றும் வசனமே இயேசு.

இதை பற்றி சற்றே சிந்தியுங்கள். இந்த அற்புதமான சத்தியம் பிரமிப்பால் உங்களை நிறைத்து கர்த்தரின் காலடியில் ஆராதனம் செய்ய விழைவிக்கும்.

ஆனால், "வார்த்தையானவர் மாமிசமானார்" என்பதற்கும் பணிவுக்கும் என்ன சம்பந்தம்?

பைபிள் வழுவற்றது மற்றும் தவற்றது. இது முழுவதும், 100% உண்மை. இருப்பினும், அது சொல்லும் பல காரியங்கள் நமது ஆனாலும், அது கீழ்க்கண்டவற்றைச் சொல்லுகிறது, அவை எங்களது மாமிச ரீதியான தருக்கத்திற்கு பிடிக்காமல் இருக்கும்:

  • அது நம்மை குற்ற எண்பிக்கும் விஷயங்களை கூறும்; அவற்றின் மூலம் தேவன் நம் இதயங்களை மாற்ற நாடுகிறார்.
  • பாவமிக்க கலாசாரம் வெறுக்கும் பல விஷயங்களை அது சொல்லுகிறது.
  • அனைத்திலும் விசித்திரமாக, நம் அகந்தை மிகு இதயங்கள் ஒப்புக்கொள்ள விரும்பாத பல நல்ல விஷயங்களையும் சொல்லுகிறது.

முக்கியமான விஷயம் இதுவே:

தேவன் சொல்லும் நல்ல விஷயங்களை நம்ப பணிவு தேவைப்படுகிறது.

கடவுள் அவர்களுக்கு அனுப்ப விரும்பும் அனைத்து திருத்தங்களையும் கேட்கத் தயாராக இருப்பதாக ஒருவர் என்னிடம் எத்தனை முறை சொன்னார்கள் என்று என்னால் சொல்ல முடியாது - நாம் தவறு செய்யும் போது நமக்குச் சொல்லப்படும் வார்த்தைகள். ஆனால் அதே நபர் எனக்கு முன்னால் அமர்ந்து, கர்த்தர் தங்களைப் பற்றிச் சொல்லும் எந்த நல்ல விஷயங்களையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை என்று அதே மூச்சில் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

நண்பரே, நாங்கள் தேவனால் தம்மை பற்றி சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளாவிடில்-அது ஊக்கமளிப்பதாக அல்லது குற்ற எண்பிப்பு விஷயமாக இருந்தாலும்-நமக்கு அகந்தை பிரச்சனை உள்ளது என்றாகிறது.

தேவன் சொல்லும் அனைத்தையும் நாம் ஏற்காவிட்டால்-நம்மை உறுதிசெய்யும் மற்றும் தப்பான சுயமரியாதைக்கு எதிரிடையாக இருந்தாலும் கூட-நாம் அகந்தையுடையவரே. மட்டுமல்லாமல் உங்கள் இதயத்தில் அதந்தையிருந்தால், அந்த அகந்தை தேவனுக்கு எதிரிடையானது. அது உங்கள் வாழ்க்கையில் “தடைகளை” அவர் இடச்செய்கிறது. ஆம், நீங்கள் பணிவுகொள்ள உதவ அவர் உங்களை ஒழுக்கபடுத்துவார்...

... ஆனால் அவர் என்ன சொன்னாலும் நம்புவேன் என தீர்மானம் கொண்டால் இது மிகவும் எளிதாகும் அல்லவா?

இதன் பொருட்டே,”தேவனே, உமது வசனத்தனை நம்ப எனக்கு உதவுங்கள்” என ஜெபிக்கிறோம்.

இறைவனின் வசனத்தை நம்புவது பணிவின் அறிகுறியாகும். தேவனின் வசனத்தை நாம் நம்புகிறோம் எனில்– அவரது வசனங்கள் நம் பாவ பழக்கங்கள், தீய எண்ண சௌத்துக்கள் அல்லது தாழ்ந்த சுயமரியாதை போன்றவகைகளை உடைத்தெரிந்தாலும் - அது கூறும் அனைத்தையும் நம்ப வேண்டும்.

நண்பரே, நீங்கள் பணிவுடன் இருக்க வேண்டுமென்றால், இறைவன் கூறும் எல்லாவற்றையும் நம்புவேன் என முடிவு செய்யுங்கள்:

  • அவரது வசனம் உங்களை குற்ற எண்ணிப்பு செய்கயில் நம்புங்கள், உங்களை உறுதி செய்கயில் அதை இன்னமும் கூட நம்புங்கள்.
  • அவர் உங்களை ஒழுக்கபடுத்தும் போதும் நம்புங்கள், அவர் உங்களை ஆசீர்வதிக்கையில் இன்னமும் நம்புங்கள்.

அவரது வசனம் மெய்யானது, ஆனால் அதன் முழு நற்பயனையும் அடைய-அவரது ஆவியின் உதவியுடன் நீங்கள் கேள்க வேண்டும்-அவரது வலிமை வாய்ந்த கரங்களின் கீழ் உங்களை பணிவடைய செய்ய வேண்டும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

5 Prayers of Humility

இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபரம் ஷிஸ் பிரசன்ஸ் நிறுவனதிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.fromhispresence.com